Viral Video : இப்படி ஒரு Subway இருந்தால் யாருக்கும் கடந்து செல்லவே மனசு வராது.. வியக்கவைக்கும் வீடியோ!

Viral Art Gallery Subway | மனிதர்களை வியப்புடன் வைத்திருக்கும் விஷயங்களில் கலைநயமும் ஒன்று. இந்த நிலையில், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் சுரங்கப்பாதை அதன் கலைநயத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : இப்படி ஒரு Subway இருந்தால் யாருக்கும் கடந்து செல்லவே மனசு வராது.. வியக்கவைக்கும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

30 Jun 2025 15:35 PM

 IST

உலகம் முழுவதும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் பொதுமக்களுக்காக பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறு ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல சுரங்கப்பாதைகள் (Subway) இருக்கும். இந்த சுரங்கப்பாதைகள் சாலைகளில் இருந்து ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக இருக்கும். இதுதவிர பொதுமக்களுக்கு தேவையான நாற்காலி வசதிகள் உள்ளிட்டவை இருக்கும். ஆனால், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் இடம் பெற்றுள்ள ஆர்ட் கேலரி (Art Gallery) போன்ற சுரங்கப்பாதை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கலைநயத்தில் அசத்தும் சுரங்கப்பாதை

பொதுவாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அந்த நாடு குறித்த எதிர்ப்பார்ப்புகள் எழும். காரணம், ஓவ்வொரு நாடும் ஒரு வகையான கலை அழகை கொண்டு இருக்கும். ஆனால், இந்த கலைகள் அந்த நாட்டில் இருக்கும் முக்கியமான நகரங்கள் கட்டடங்கள், புனித ஸ்தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் ஆகிய இடங்களில் மட்டும்தான் இருக்கும். ஆனால், சுற்றுலா சென்ற பெண் ஒருவர் அந்த நாட்டில் இருக்கும் சுரங்கப்பாதையை கண்டு ஆச்சர்யத்தில் உறைந்துள்ளார். அது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள நிலையில், அது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தை வியப்பில் ஆழ்த்திய வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அது ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் சுரங்கப்பாதை ஆகும். ஆனால், அது மற்ற சுரங்கப்பாதைகளை போல் இல்லாமல் மிகவும் கலைநயத்துடன் இருக்கிறது. அந்த சுரங்கப்பாதையில் திரும்பும் இடமெல்லாம் கலைநயம் நிறைந்துள்ளது. சுரங்கப்பாதை முழுவதும் வண்ண ஓவியங்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, சுரங்கப்பாதையின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், அழகாகவும் உள்ளது. அவற்றை பார்க்கும் அந்த பெண் அப்படியே உறைந்து போய் நிற்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள் இப்படி ஒரு சுரங்கப்பாதை இருந்தால் நான் எனது பயணத்தை மறந்துவிட்டு அங்கேயே அப்படியே நின்றுவிடுவேன் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.