Viral Video : கொல்கத்தா மழை வெள்ளம்.. மீனை கவ்விக்கொண்டு சுற்றி வந்த பாம்பு.. குடியிருப்பு வாசிகள் அச்சம்!

Kolkata Rain Damage Vira Video | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அந்த மழை நீரில் பாம்பு ஒன்று நீந்திச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : கொல்கத்தா மழை வெள்ளம்.. மீனை கவ்விக்கொண்டு சுற்றி வந்த பாம்பு.. குடியிருப்பு வாசிகள் அச்சம்!

வைரல் வீடியோ

Updated On: 

26 Sep 2025 22:45 PM

 IST

மழை வெள்ளத்தின் போது பூச்சிகள், தவளை உள்ளிட்ட உயிரினங்கள் வீடுகளுக்கு புகுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், கொலகத்தாவில் பெய்த கனமழை காரணமாக அங்கு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த மழை நீரில் பாம்பு ஒன்று மீனை கவ்விக்கொண்டு சுற்றித் திரியும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொல்கத்தா மழை வெள்ளம் – குடியிருப்பு பகுதியில் சுற்றுத் திரிந்த பாம்பு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கொல்கத்தாவின் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு ஒன்று மீனை வாயில் கவ்விக்கொண்டு சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : உங்கள் ரூ.132 என்னை பணக்காரனாக மாற்றாது.. பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப் டிரைவர்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழந்துள்ளது. அப்போது அந்த மழை நீரில் ஒரு பாம்பு வாயில் மீனை கவ்விக்கிக்கொண்டு அங்கும் இங்குமாக நீந்திச் செல்கிறது. இதனை யாரோ ஒருவர் இரும்பு படிக்கெட்டின் மீது நின்றுக்கொண்டு படம் பிடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு சுற்றித் திரிவதால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.