Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!

Old Woman Running Hotel At The Age of 70 | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மூதாட்டி ஒருவர் தனது 70 வயதில் தனி ஆளாக ஹோட்டல் நடத்தி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!

வைரல் வீடியோ

Published: 

14 Feb 2026 18:19 PM

 IST

உலகில் பல்வேறு விதமான மனிதர்கள் இருப்பார்கள், அவர்கள் வித்தியாசமான எண்ணங்கள் திட்டங்களை கொண்டு இருப்பர். சிலர் இப்படி தான் வாழ வேண்டும் என தங்களுக்கான மிக கடுமையான கோட்பாடுகளை வைத்திருப்பர். ஆனால், சிலர் வாழ்க்கை போகும் போக்கில் தங்களது வாழ்நாளை கடத்துவர். தங்களது வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டும் என நினைக்கும் மனிதர்களில் சிலர் கடைசி வரை உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதி கொண்டு இருப்பர். அத்தகைய உறுதி கொண்ட மூதாட்டி ஒருவரின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. யார் அந்த மூதாட்டி, அவர் அப்படி என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடைசி வரை உழைத்து வாழ வேண்டும் என்று உறுதியாக இருக்கும் மூதாட்டி

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால் இந்த உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் சில உண்ணதாம மனிதர்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் இந்த மூதாட்டியின் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மூதாட்டி ஒருவர் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க : ஒரே சிரிப்பில் பேமஸ்.. லாரி கிளீனர் டூ பிரபலம்.. யார் இந்த சிரிப்பு சிறுவன்?

அவர் தனது கடை மூலம் மதிய உணவு வழங்கி வரும் நிலையில், ஒரு நாளைக்கு அவரது கடைக்கு 5-க்கும் குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர். புகை படிந்த கடையில், விரகு அடுப்பை வைத்து அந்த மூதாட்டி இந்த கடையை நடத்தி வருகிறார். அவருக்கு துணைக்கு அவரது குடும்ப உறவினர்கள் உதவி செய்யவில்லை என்றாலும், மூதாட்டி தனி ஆளாக உணவு சமைப்பது, கடையை சுத்தம் செய்வது, உணவு பரிமாறுவது, பாத்திரங்களை கழுவதும் என அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

தனியாக கடையை நடத்துவது சிரமமாக இருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதும் அந்த கடையை நடத்துவேன் என மூதாட்டி உறுதியாக உள்ளார். அவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் மூதாட்டி குறித்து வியந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் கேம் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் இசைச் சாலை.. 70-80 கி.மீ. வேகத்தில் சென்றால் ‘ஜெய் ஹோ’ இசைக்கும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் 100 ஆண்டு கால பத்திரங்களை வெளியிட்ட ஆல்பபெட்
பீகாரில் இளைஞரை கடத்தி கட்டாய திருமணம் - பரபரப்பு தகவல்