Viral Video : சுற்றுலா பயணியை கன்னத்தில் அறைந்த ஆமை.. வைரல் வீடியோ!
Man Got Slap From Turtle Under Water | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சுற்றுலா பயணி ஒருவரை தண்ணீருக்குள் ஆமை ஒன்று கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில சுவாரஸ்ய மற்றும் அசாத்தியமான வீடியோக்களும் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சுற்றுலா பயணி ஒருவரை கடலுக்குள் ஆமை ஒன்று கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுற்றுலா பயணியை கன்னத்தில் அறைந்த ஆமை
கிறிஸ்டோபர் சாங் என்ற நபர் உலகத்தை சுற்றி பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், கடலுக்குள் நீந்திக்கொண்டு இருந்த அவர், மிகவும் வித்தியாசமான சம்பவத்தை எதிர்க்கொண்டுள்ளார். அதனை வீடியோ பதிவு செய்திருந்த அவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : மருத்துவரின் கை உரையை விடாமல் பிடித்துக்கொண்ட பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சுற்றுலா பயணி ஒருவர் தண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறார். அவர் தண்ணீருக்குள் நீச்சல் அடிப்பதை வீடியோ எடுக்கிறார். அப்போது தொலைவில் இருந்து ஆமை ஒன்று வருகிறது. அது அவருக்கு அருகில் வந்ததும், அவரது கன்னத்தில் அறைகிறது. அதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த நபர் தண்ணீருக்கு மேலே வந்து அது என்னை கன்னத்தில் அறைந்தது என்று கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கேதார்நாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.