Viral Video : சான் பிரான்சிஸ்கோ வானில் பறந்த ராட்சத வெள்ளை விமானம்.. குழம்பிய மக்கள்!

Giant Airship on San Francisco Sky | கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மிகப்பெரிய ராட்சத அளவிலான விமானம் ஒன்று பறந்துள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : சான் பிரான்சிஸ்கோ வானில் பறந்த ராட்சத வெள்ளை விமானம்.. குழம்பிய மக்கள்!

வைரல் வீடியோ

Published: 

30 Oct 2025 14:37 PM

 IST

வானத்தில் விமானம் சென்றாலே அதனை ஆச்சர்யமாக பார்க்கும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) வானத்தில் மிகப்பெரிய ஏர்ஷிப் (Airship) ஒன்று பறந்து சென்றது அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்திலும் குழப்பதிலும் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் அது என்ன என்பது தெரியாமல் குழம்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், தற்போது சான் பிரான்சிஸ்கோவில் பறந்த ஏர்ஷிப் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சான் பிரான்சிஸ்கோ வானில் பறந்த ராட்சத ஏர்ஷிப்

சான் பிரான்சிஸ்கோவின் வானில் வெள்ளை நிறத்தில் ராட்சத விமானம் ஒன்று எந்த வித சத்தமும் இன்றி பறந்துள்ளது. அது பார்ப்பதற்கு விமானத்தை போல இல்லாததால் பொதுமக்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டதும் தான் அது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் அது ஒரு ஏர்ஷிப் ஆகும். லைட்டர் தென் ஏர் (LTA – Liter Than Air) என்ற நிறுவனத்தால் இந்த ஏர்ஷிப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்ஷிப்புக்கு பாத்ஃபைண்ட் 1 என பெயரிடப்பட்டுள்ளது. 124 மீட்டர் நீலம் கொண்ட இந்த ஏர்ஷிப் சரக்கு போக்குவரத்தில் பெரிய புரட்சியை செய்யும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் போன யுபிஐ.. சமோசா விற்பவரிடம் சிக்கிய நபர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு உயர்ந்த கட்டத்தின் பின்பக்கத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ராட்சத விமானம் ஒன்று வருகிறது. அது மற்ற விமானங்களை போல இல்லாமல் மிகவும் மெதுவாக செல்கிறது. அதன் தோற்றமும் சாதரன விமானங்களை போல இல்லை. இதனால், அதனை கண்ட சான் பிரான்சிஸ்கோ மக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பெற்றோரிடம் செல்போனில் பேசிய சிறுவன்.. கடுமையாக தாக்கிய பள்ளி ஆசிரியர்.. அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த ஏர்ஷிப்பின் தோற்றம் அச்சமூட்டும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.