Viral Video : வெறும் ரூ.50-க்கு மருத்துவம்.. இந்தியாவின் மருத்துவ வசதி குறித்து வியந்து வீடியோ பதிவிட்ட வெளிநாட்டு பெண்!
Foreign Woman Praise Indian Health Care System | வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவர். அந்த வகையில் இந்தியா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இந்திய மருத்துவ அமைப்பை பாராட்டி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாதிரி புகைப்படம்
உலகம் எங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்தமான நல்ல அனுபவம் கிடைத்தால் அவர்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வருவர். அந்த வகையில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இந்தியா குறித்த தனது அனுபவத்தையும், இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவ வசதி குறித்தும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் ரூ.50-க்கு மருத்துவம் – வியந்து பேசிய வெளிநாட்டு பெண்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விலை சற்று குறைவாக இருக்கும். இது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிக எளிதாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இந்தியாவின் மருத்துவ வசதி குறித்தும், இந்தியாவில் எவ்வாறு விலை குறைவாக மருத்துவம் கிடைக்கிறது என்பது குறித்தும் வியந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ‘எனக்கு 6 பானிபூரி வேணும்’ நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.. திணறிய போலீஸ்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பேசும் அந்த வெளிநாட்டு பெண், நான் இந்தியாவுக்கு வந்தபோது காய்கறி வெட்டிக்கொண்டு இருந்தேன். அப்போது தெரியாமல் எனது விரலை வெட்டிக்கொண்டேன். அதன் காரணமாக ரத்தம் வெளியேற்கிக்கொண்டே இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் ரத்தத்தை நிறுத்த முடியவில்லை. அதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். காயம் ஆழமாக இருப்பதால் தையல் போட வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு தேவையில்லை என கூறி கட்டு போட்டு அனுப்பி வைத்தனர். கடைசியாக நான் எனக்கு அளித்த சிகிச்சைக்கு பணம் செலுத்த சென்றபோது அவர்கள் என்னிடம் இருந்து வெறும் ரூ.50 மட்டுமே வங்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க : Viral Video : கட்டிப்பிடிக்க வேண்டும்.. கொரியா பெண்களிடம் ஆசையை கூறிய இளைஞர்.. வலுக்கும் கண்டனம்!
நான் மருத்துவமனையில் 45 நிமிடங்கள் இருந்தேன். இதுவே அமெரிக்கா என்றால் குறைந்தது 2000 அமெரிக்க டாலர்களாவது செலுத்து வேண்டி இருந்திருக்கும். இந்தியாவில் மிக மலிவான மருத்துவ வசதி உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.