Viral Video : விமான பயணத்திற்கு முன்பு குழந்தையின் தந்தை வெளியிட்ட அறிவிப்பு.. வரவேற்பை பெற்ற வீடியோ!

Father Made Announcement To Co Passengers | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தந்தை ஒருவர் விமான பயணத்திற்கு முன்னதாக தனது குழந்தையின் சேட்டை குறித்து அறிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : விமான பயணத்திற்கு முன்பு குழந்தையின் தந்தை வெளியிட்ட அறிவிப்பு.. வரவேற்பை பெற்ற வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

16 Mar 2026 23:33 PM

 IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாளுக்கு  நாள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில பெரும் வரவேற்பையும், சில வீடியோக்கள் கடும் எதிர்ப்பையும் பெறும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது குழந்தையுடன் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு விடுத்த அறிவிப்பு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னதாக தந்தை கோரிக்கை

பயணங்களின்போது குழந்தைகளை கையாளுவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அவர்கள் கால சூழலுக்கு ஏற்ப நடந்துக்கொள்ள மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு தங்களை சுற்றி நடைபெறும் அனைத்துமே புதியதாக தோன்றும். இதன் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பயணத்தின் போது அடிக்கடி அழுவது, கத்துவ உள்ளிட்ட செயல்களை செய்வர். அந்த வகையில், குழந்தையுடன் பயணம் செய்யும் தந்தை ஒருவர், விமான பயணத்திற்கு முன்னதாக தனது மகள் குறித்து சக பயணிகளுக்கு அறிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய இரட்டை டூம்ஸ்டே மீன்கள்.. பேரழிவின் அறிகுறியா?

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தந்தை ஒருவர் எழுந்து நின்று, என்னுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு அறிவிப்பு. நாங்கள் குழந்தையுடன் பயணம் செய்கிறோம். அவள் சிறு பிள்ளை என்பதால் அடிக்கடி அழுவது, கத்துவது போன்ற செயல்களை செய்வால். குழந்தை வைத்துள்ள அனைவருக்கும் இது தெரியும். எனவே பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்பட்ட தந்தை.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த தந்தையின் முயற்சிக்கு பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்