Viral Video : இது தான் அன்பு.. தண்ணீரில் விழுந்த மானை காப்பாற்றிய யானை.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

Elephant Rescues Drowning Deer | பொதுவாக யானைகள் அன்பு மிகுந்த உயிரினமாக உள்ளன. யானைகள் எவ்வாறு தங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காதோ அதேபோல, தானும் உதவி செய்ய மறப்பதில்லை. அந்த வகையில், தண்ணீரில் மூழ்கும் மான் ஒன்றை யானை காப்பாற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : இது தான் அன்பு.. தண்ணீரில் விழுந்த மானை காப்பாற்றிய யானை.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

10 Jun 2025 12:54 PM

 IST

சமூக ஊடகங்களின் (Social Medias) உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மிக எளிதாக தெரிய வந்துவிடுகிறது. உலகின் எந்த மூலையில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தாலும் அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தண்ணீரில் மூழ்கும் சிறிய வகை மான் ஒன்றை யானை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் மிகவும் வியப்புடன் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களை போலவே உணர்வு மிக்க உயிரினமாக உள்ள யானைகள்

விலங்கு இனங்களிலேயே யானைகள் மிகவும் உணர்வு பூர்வமான உயிரினங்களாக உள்ளன. யானைகள் தங்களது இனத்தின் மீது அதிக பற்று கொண்டிருக்கும். தங்கள் இனத்தில் ஏதேனும் ஒரு யானைக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது யானைகள் எங்கேனும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டாலோ அவற்றை மீட்பதற்காக போராடும் வீடியோ காட்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் யானை ஒன்று தண்ணீரில் மூழ்கும்  மானை காப்பாற்றுகிறது. இந்த வீடியோ யானைகள் தன் இனத்தின் மீது மட்டுமல்ல சக உயிரினங்கள் மீது அன்பு கொண்டவை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோவில், பூங்கா ஒன்றில் சில மான்கள் மற்றும் யானை ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அங்கு ஒரு சிறிய குளம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அது முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதில் மான் ஒன்று தவறி விழுந்துவிடுகிறது. அதனை கண்டு அங்கிருந்த யானை, மானை காப்பாற்ற முயற்சி செய்கிறது. முதல் முறை முயற்சி செய்த போது மான் மீண்டும் தண்ணீரில் விழுந்துவிடுகிறது. மீண்டும் ஒருமுறை யானை அந்த மானின் கொம்பை தனது தும்பி கையால் இருக்க பிடித்து தூக்குகிறது. அப்போது மான் தண்ணீரில் இருந்து வெளியே வந்து எழுந்து ஓடுகிறது. பிறகு அந்த மானை பின்தொடர்ந்து செல்லும் யானை அது நலமுடன் இருக்கிறது என்பதை சோதிக்கும் வகையில், மானை தொட்டு பார்க்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..