Viral Video : மலை ஏற Robotic Legs பயன்படுத்திய பெண்.. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ!

Young Woman Climbed Mountain With Robotic Legs | மலை ஏறுவது சற்று சவாலான விஷயம் தான். காரணம், மலைகள் செங்குத்தாக இருப்பதனால் அதன் மீது ஏறும்போது கால்களில் வலி ஏற்படும். அதற்காக பெண் ஒருவர் ரோபோட்டிக் கருவியை பயன்படுத்தியுள்ளார்.

Viral Video : மலை ஏற Robotic Legs பயன்படுத்திய பெண்.. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

11 Oct 2025 21:20 PM

 IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகின் எந்த மூலையில் வித்தியாசமான அல்லது சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கும். அந்த வகையில், சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலை ஏற ரோபோ கால்களை பயன்படுத்திய வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபோருளாக உள்ளது. அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ, இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரோபோ கால்களுடன் மலை ஏறிய பெண்

மலை ஏற வேண்டும், சாகசம் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான நபர்களுக்கு ஆசையாக இருக்கும். ஆனால், மலை ஏறும்போது ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பலரும் அதனை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர். இந்த நிலையில் தான் சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலை ஏறுவதற்கு புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதாவது அந்த பெண் மலை ஏற ரோபோ கால்களை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : சீன பெருஞ்சுவரில் டுரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவு.. வியக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் தனது இடுப்பில் அந்த கருவியை கட்டிக் கொண்டு மலை ஏற தொடங்குகிறார். பிறகு அது எப்படி இயங்குகிறது என்பதை அவர் சோதனை செய்கிறார். அதனை தொடர்ந்து அந்த பெண் மலை ஏறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சாக நடனமாடிய டெலிவரி ஊழியர்கள்.. வைரல் வீடியோ!

இது குறித்து பதிவிட்டுள்ள அந்த இளம் பெண், வழக்கமாக மலையேறும்போது நான் மிக கடினமாக உணருவேன். ஆனால், இந்த முறை அப்படியில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது எவ்வாறு இயங்குகிறது, உண்மையாகவே அது உங்களுக்கு உதவியாக இருந்ததா என்பது குறித்து பல்வேறு கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.