Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திடீரென ஆக்ரோஷமடைந்த ரோபோட்.. ஊழியர்களை சரமாரியாக தாக்கியதால் அதிர்ச்சி!

Viral Video Shows Aggressive Robotic Behavior | சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ரோபோட் பணியில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கோடிங் கோளாறு காரணமாக ரோபோட் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டுள்ளது. அதன் காரணமாக ரோபோட் அங்கிருந்த ஊழியர்களை தாக்கிய காட்சி இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

திடீரென ஆக்ரோஷமடைந்த ரோபோட்.. ஊழியர்களை சரமாரியாக தாக்கியதால் அதிர்ச்சி!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 04 May 2025 18:47 PM

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பல இடங்களில் ரோபோட்டிக் (Robotic Technology) அம்சம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் மனிதர்களுக்கு பதிலாகவும், சில இடங்களில் பொதுமக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கிற்காவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரோபோ திடீரென ஆக்ரோஷமாக அங்கிருக்கும் பணியாளர்களை தாக்க தொடங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலையில் ஊழியர்களை கடுமையாக தாக்கிய ரோபோட்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பல இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோக்கள் மிக எளிதாகவும், விரைவாகவும் வேலைகளை செய்து முடிப்பதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் ரோபோக்களை பணியில் வைக்கின்றனர். அந்த வகையில், சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த ரோபோ திடீரென அங்கிருக்கும் ஊழியர்களை தாக்க தொடங்குகிறது. மிகவும் ஆக்ரோஷம் அடையும் அந்த ரோபோ தனது கை மற்றும் கால்களை மிக வேகமாக அசைக்கிறது.

அதனை கண்டு அங்கு நின்றுக்கொண்டிருக்கும் ஊழியர்கள் சிலர் தலைதெறிக்க ஓடுகின்றனர். பின்னர் மற்றொரு ஊழியர் வந்து அந்த ரோபோவை சரிசெய்கிறார். ரோபோ இவ்வாறு ஆக்ரோஷமாக மாற தொடங்கியதுமே அதன் அருகில் இருந்த பணியாளர்கள் தள்ளி சென்றுவிட்ட நிலையில், யாருக்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ள நபர், கோடிங்கில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அந்த ரோபோ அவ்வாறு மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சற்று கவன குறைவாக இருந்தாலும் அந்த ஊழியர்களின் நிலை மிகவும் மோசமானதாக மாறியிருக்கும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதர்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ரோபோட் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், இந்த ரோபோவின் செயல் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளதாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?...
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!...
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...
பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்...
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்...