Viral Video : நீர்வீழ்ச்சியாக மாறிய மேம்பாலம்.. கொட்டித் தீர்த்த மழைநீர்.. வைரல் வீடியோ!

Bengaluru Flyover Turns Waterfall | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் பெய்த கனமழை காரணமாக புதியதாக திறக்கப்பட்ட மேம்பாலம் நீர்வீழ்ச்சி போல் மாறி மழை நீர் கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : நீர்வீழ்ச்சியாக மாறிய மேம்பாலம்.. கொட்டித் தீர்த்த மழைநீர்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

09 Sep 2025 16:51 PM

 IST

வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் தேங்குவது, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துக்கொண்டு இருப்பது உள்ளிட்ட பல சிக்கல்களை பொதுமக்கள் எதிர்க்கொண்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்களும் பல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதியதாக கட்டப்பட்ட மேம்மபாலத்தில் இருந்து மழை நீர், நீர்வீழ்ச்சியை போல கொட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நீர்வீழ்ச்சியாக மாறிய மேம்பாலம் – கொட்டித் தீர்த்த மழைநீர்

இந்தியாவின் வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், பெங்களூருவிலும் மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், பல பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இவ்வாறு மழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், மேம்பாலத்தில் இருந்து மழைநீர், நீர்வீழ்ச்சியை போல கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டும் நபர்.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெங்களூரில் புதியதாக திறக்கப்பட்ட மேம்பாலம் ஒன்று இருக்கிறது. அந்த பகுதில் பலத்த மழை பெய்து முடித்த நிலையில், மேம்பாலத்தில் தேங்கிய மழைநீர் கிழே வெளியேறி வருகிறது. மேம்பாலத்தில் இருந்து மழைநீர் வெளியேறுவதை பார்ப்பதற்கு நீர் வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் கொட்டுவதை போல உள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பாடல் பாடிய பாதுகாவலர்.. கட்டி அணைத்தபடி மெய் மறந்து கேட்ட யானை.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரில் புதிய நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பலரும் கிண்டலாக கருத்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.