வாடஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அப்போ உடனடியாக இதை டிரை பண்ணுங்க!

WhatsApp Hack : வாட்ஸ்அப் அதன் பயனர்களின் தனியுரிமையை உறுதி செய்வதற்காக தளத்தில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துள்ளது. இருப்பினும், ஹேக்கிங் என்பது மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் ஒரு மோசமான பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருக்கலாம்.

வாடஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? அப்போ உடனடியாக இதை டிரை பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

10 Oct 2025 16:18 PM

 IST

ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் உங்கள் வாட்ஸ்அப்பைத் (WhatsApp) திறந்து பார்க்கும்போது, அதில் உங்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் அக்கவுண்ட் வேறொருவரின் கைகளில் இருப்பதாக புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதற்காக பீதி அடையத் தேவையில்லை. பெரிய இழப்புகள் ஏற்படும் முன் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். முதலில், உங்கள் அக்கவுண்ட் ஆபத்தில் உள்ளது என்பதை உங்கள் ஸ்மார்ட்போன் காண்டாக்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்.  இதனால் அவர்களிடம் உங்கள் சார்பில் பணம் அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், எச்சரிக்கையாக இருக்க முடியும். இதற்குப் பிறகு, உங்கள் கணக்கை மீட்டெடுக்கவும் மேலும் இழப்புகளைத் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • வாட்ஸ்அப் செட்டிங் பகுதிக்கு சென்று இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) என்பதைச் சரிபார்க்கவும். பெரும்பாலும், ஹேக்கர்கள் வேறு சிஸ்டம் அல்லது மொபைலில் இருந்து, குறிப்பாக இணையதளம் வழியாக உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைகிறார்கள். நீங்கள் ஒரு அறிமுகமில்லாத டிவைஸ்களைக் கண்டால், உடனடியாக வெளியேற்றவும்.

இதையும் படிக்க : இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

  • இதற்குப் பிறகு, உங்கள் போனில் உடனடியாக WhatsApp-ஐ லாக் அவுட் செய்து பின் மீண்டும் உள்நுழைய முயற்சிக்கவும். நீங்கள் மீண்டும் உள்நுழையும்போது, ​​SMS வழியாக சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவீர்கள். அப்போது பெரும்பாலும் இணைக்கப்பட்ட பழைய டிவைஸ்கள் தானாகவே துண்டிக்கப்படும். ஹேக்கர் மீண்டும் உள்நுழைய முயற்சித்தால், அவர்களுக்கு அதே சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படும், எனவே இந்த படி மிகவும் முக்கியமானது.
  • பின்னர், வாட்ஸ்அப்பிற்கு support@whatsapp.com என்பதன் வழியாக ஒரு புகாரை அனுப்பி, உங்கள் நிலைமையை விளக்கி உதவி கேட்கவும். சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிப்பதும் உதவியாக இருக்கும். இந்தியாவில், நீங்கள் 1930 அல்லது அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் வலைத்தளம் மூலம் புகாரளிக்கலாம்.
  • உங்கள் சிம் மாற்றப்பட்டதாகவோ அல்லது உங்கள் மொபைல் எண் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டதாகவோ நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் நெட்வொர்க் ஆபரேட்டரைத் தொடர்புகொண்டு உங்கள் சிம் பயன்பாட்டை தடுக்கவும் அல்லது மீட்டெடுக்கவும். பல நேரங்களில், ஹேக்கர்கள் சிம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
  • உங்கள் கணக்கைத் திரும்பப் பெற்றவுடன், உடனடியாக மல்டி ஃபேக்டர் அத்தென்டிகேஷனை (2FA) இயக்கி, வலுவான பின்னை அமைக்கவும். வாட்ஸ்அப் மட்டுமல்ல, உங்கள் வாட்ஸ்அப்புடன் இணைக்கப்பட்ட ஜிமெயில் உள்ளிட்டவற்றின் பாஸ்வேர்டையும் மாற்றவும்.

இதையும் படிக்க : புதிய ஸ்மார்ட்போன் வாங்கபோறீங்களா? இந்த விஷயங்கள் இருக்கா என கவனிங்க!

  • உங்கள் வங்கி மற்றும் யுபிஐ பயன்பாடுகளில் எச்சரிக்கைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பதட்டமடைவதற்குப் பதிலாக, உங்களுக்கு நெருக்கமானவர்களை எச்சரித்து, மோசடிகளை முடிந்தவரை தவிர்க்கலாம்.
  • இறுதியாக, எச்சரிக்கையாக இருப்பதே சிறந்த பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள், OTP-களைப் பகிராதீர்கள், மேலும் வாட்ஸ்அப் இணைக்கப்பட்ட டிவைஸ்களைத் தொடர்ந்து சரிபார்க்கவும்.