வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 பணத்தை எடுத்த வங்கி.. பொறுப்பை ஏற்க மறுத்ததால் பெண் அதிர்ச்சி!

Woman Lost 90,000 After Bank Tool it From Account | பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.90,000 பணம் எடுக்கப்பட்டது அவரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 பணத்தை எடுத்த வங்கி.. பொறுப்பை ஏற்க மறுத்ததால் பெண் அதிர்ச்சி!

மாதிரி புகைப்படம்

Published: 

01 Nov 2025 23:45 PM

 IST

பெங்களூரு, நவம்பர் 01 : பெங்களூருவை (Bengaluru) சேர்ந்த பெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து அவரிடம் அனுமதி பெறாமல் மூன்று முறை பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். தனது வங்கி கணக்கில் இருந்து தனது ஒப்புதல் இல்லாமல் சுமார் ரூ.90,000 பணம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த நிலையில், பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்தி ரூ.90,000 எடுத்த வங்கி

பெங்களூரை சேர்ந்த மகேஸ்வரி என்ற அந்த பெண் தூக்கிங்கொண்டு இருந்துள்ளார். அப்போது அதிகாலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது.  அதாவது அந்த பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் காலை 3.24 மணி முதல் மணி வரையிலான நேரத்தில் மூன்று தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.30,000 விகிதம் ரூ.90,000 வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஓடிபி, குறுஞ்செய்தி என எதனையும் வங்கியின் பக்கம் இருந்து தனக்கு வரவில்லை என்று அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களுக்கு வேறு சார்ஜர்களை பயன்படுத்த கூடாதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒடிபி அடிப்படையில் பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறிய வங்கி

இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள வங்கி, அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஓடிபி அடைப்படையில் தான் அந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வங்கி கூறியுள்ளது. ஆனால், வங்கியின் இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பெண், தனக்கு அந்த பரிவர்த்தனை தொடர்பான எந்த வித தகவலும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். தெரியாத யுபிஐ ஐடியில் இருந்து இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Oppo Find X9, Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த விவகாரம் அக்டோபர் 1, 2025 அன்று அதிகாலை நடைபெற்ற நிலையில், அதிகாலை 4.37 மணிக்கு அந்த பெண் இது குறித்து வங்கிக்கு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காலை 7.20 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.