மழை நேரத்தில் டிவி சிக்னல் தடைப்படுகிறதா? எப்படி தவிர்ப்பது?
DTH signal issues : எச்டி சேனல்கள், மலிவான விலை உள்ளிட்ட பல நன்மைகளுடன் சாட்டிலைட் டிவி என அனைவரது விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால் மழை காலத்தில் சிக்னல் குறைவதுபோன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரி புகைப்படம்
சாட்டிலைட் டிவி (Satellite TV) இன்று பல வீடுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள செய்தி, பொழுது போக்கு, விளையாட்டு, திரைப்பட சேனல்களை எச்டி குவாலிட்டியில் வழங்குகிறது . கேபிள் டிவிகள் போன்று அடிக்கடி சர்வீஸ் தேவையில்லை. இருந்தாலும் மழை காலம் தொடங்கியதும், டிவி பார்க்கும்போது சிக்னல் தடைபடுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக முக்கியமான நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, No Signal எனும் எனும் மெசேஜை திரையில் பார்த்தால், நமக்கு வெறுப்பு ஏற்படும். ஆனால் அதன் பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் தீர்வுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மழை டிவி சிக்னலை எப்படி பாதிக்கிறது?
சாட்டிலைட் டிவி சேனல்கள் Q-Band மற்றும் K-Band எனப்படும் மின்காந்த அலைகளை பயன்படுத்தி செயல்படுகின்றன. மழை, புயல் போன்ற வானிலை மாற்றங்கள் இந்த அலைகளை பாதிக்கின்றன. வளிமண்டலத்தில் உருவாகும் மின்னல், காற்றழுத்தம் மற்றும் கனமழை போன்றவை இந்த சிக்னல்களை தடுக்கும். இதனால் டிஷ் ஆண்டெனாவுடன் உள்ள தொடர்பு தடைபட்டு, டிவியில் நோ சிக்னல் என்ற மெசேஜ் உங்களுக்கு கிடைக்கும்.
சிக்கலுக்கு தீர்வு என்ன?
- டிஷ் ஆண்டெனாவை, தண்ணீர் நேரடியாக விழாத இடத்தில் நிறுவுவது முக்கியம்.
- சுவரில் பொருத்தப்பட்ட டிஷ் முன் கண்ணாடியில் உருவாக்கப்படும் மறைப்பை அமைக்கலாம்.
- நான் ஸ்டிக் குக்கிங் ஸ்பிரே பயன்படுத்தலாம். குறிப்பாக ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை ஸ்ப்ரே செய்யலாம்.
- இது ஈரப்பதத்தை தடுக்கும் மற்றும் சிக்னல் குறைபாடுகளை தவிர்க்க உதவும்.
- கன மழை, புயல் காற்று போன்ற நேரங்களில் டிஷ் ஆண்டெனா நகர்ந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதை மீண்டும் சீரமைக்க முயற்சி செய்வது நல்லது.
- டிஷில் மழை நீர் தேங்கும்போது அது சிக்னல் மீது பிழைகளை உருவாக்கும். அதனால் செட்டாப் பாக்ஸ் நன்றாக வேலை செய்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
- டிஷ் மேல் தண்ணீர் விழுந்தால், மெதுவாக துடைத்து, ஒழுங்காக வேலை செய்கிறதா என பரிசோதிக்கவும்.
- நேராக வானத்திலிருந்து சிக்னல் பெறும்படி டிஷ்ஷின் திசையை சரிசெய்யலாம்.
- சிக்கல் தொடர்ந்து பிரச்னை இருந்தால் உடனடியாக நிறுவனத்தின் ஹெல்ப் லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவி கேட்கலாம்.
மழை காலத்தில் டிவி சிக்னல் பிரச்னை ஏற்படுவது இயற்கையான ஒன்று. ஆனால் சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நுட்பமான பாதுகாப்பு முறைகள் மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும். வீடுகளில் சீரான டிவி அனுபவம் பெற, இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் டிவி பார்க்கும் அனுபவமும் தடைபடாது என்பது குறிப்பிடத்தக்கது.