அதிக வெப்பம் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Smartphone Overheating | அதிக வெப்பம் காரணமாக ஸ்மார்ட்போன்களில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஸ்மார்ட்போன் வெடிப்பது, பேட்டரி சேதம் ஏற்படுவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அதிக வெப்பத்தில் இருந்து ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய டிஜிட்டல் உலகில் (Digital World) அனைவரும் ஸ்மார்ட்போன்களை (Smartphone) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிறுவர்கள் முதியவர்கள் வரை தங்களது அன்றாட தேவைகளுக்கான ஸ்மார்ட்போன்களை பரவலாக பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான நபர்களின் நாள் தொடங்குவது முதல் முடிவது வரை என ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதிக வெப்பத்தால் ஸ்மார்ட்போன்களுக்கு பாதிப்பு
பெரும்பாலான மக்களால் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கும் புரிதல் இல்லாமல் உள்ளது. ஸ்மார்ட்போன் ஒரு மின்சாதன பொருள் என்பதால் அதனை முறையாக பராமறிப்பது அவசியம் ஆகும். ஒருவேளை ஸ்மார்ட்போனை முறையாக பராமறிக்கவில்லை என்றால் அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்சாதன் பொருட்கள் அதிகம் சூடாகும் தன்மை கொண்டவை. அவை மின்சார சக்தியை உள்வாங்குவதாலும், பேட்டரிகள் மூலம் இயக்கப்படுவதாலும் அவை அதிக வெப்ப தன்மையுடன் இருக்கின்றன. இந்த நிலையில், அதிக வெப்பத்தில் இருப்பது ஸ்மார்ட்போன்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், ஸ்மார்ட்போன்கள் அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க Google Photos : கூகுள் போட்டோஸில் இனி இவை எல்லாம் தெரிந்துக்கொள்ளலாம்.. என்ன என்ன தெரியுமா?
அதிக வெப்பத்தால் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
இந்தியாவை பொருத்தவரை மே மாதங்களில் பல்வேறு பகுதிகளில் கோடை நிலவும். கோடையின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட தலைநகரங்களில் வெயில் மிக கடுமையாக இருக்கும். இத்தகைய கடுமையான வெயில் மனிதர்களை மட்டுமன்றி மின்சாதன பொருட்களையும் மிக கடுமையாக பாதிக்கும். அதிலும் குறிப்பாக கோடைக்காலங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக ஸ்மார்ட்போன்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தை தாங்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன. அதாவது, சாம்சங்க் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்க கூடியவை. இதேபோல ஜியோமி ஸ்மார்ட்போன்கள் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டுள்ளன. இந்த நிலையில், வெப்பம் இந்த அளவை மீறும் பட்சத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மொபைல் போன்களை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?
- கோடை அல்லது அதிக வெப்பமான கால சூழல்களில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
- ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் அதிக வெப்பமான இடத்தில் இருக்கிறீர்கள் என்றால் உங்களது ஸ்மார்ட்போனின் பிரைட்னஸை (Brightness) குறைத்து பயன்படுத்துங்கள்.
- மொபைல் போன்களுக்கு பயன்படுத்தும் கவர்கள் அதிக வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே, உங்கள் மொபைல் போன் அதிக வெப்பமாக இருந்தால் உடனடியாக கவரை கழட்டி வைத்துவிடுங்கள்.
- கோடைக்காலத்தில் ஸ்மார்ட்போன்களை குளிர்ச்சியான அறைகளில் சார்ச் செய்வது, ஸ்மார்ட்போன்களை விரைவில் வெப்பமடைய செய்வதில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் எத்தகைய வெப்பத்திலும் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.