இணையத்திற்கு அடிமையாகாமல் இருக்க இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Healthy Internet Habits for Better Wellbeing | பொதுமக்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் ஒரு அங்கமாக மாறிவிட்ட நிலையில், பலரும் ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளத்திற்கு அடிமையாகாமல் மிகவும் பாதுகாப்பாக அவற்றை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்திற்கு அடிமையாகாமல் இருக்க இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Jul 2025 23:33 PM

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) பொதுமக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இணைய பயன்பாடும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உயர்ந்துள்ளது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், பல சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதன் காரணமாக மன அழுத்தம், உடல்நல சிக்கல்கள், கவனகுறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர். இதுதவிர அதிக நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவது மூளையின் செயலாக்கத்தை பாதிக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், உடல்நலம் மற்றும் மனநலனை பாதிக்காமல் இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சில இடங்களில் இணையதள பயன்பாட்டுக்கு தடை விதியுங்கள்

நாள் முழுவதும் அதிக நேரம் இணையத்தை பயன்படுத்தும் நபர்கள் தங்களுக்கு தாங்களே இணையதள பயன்பாட்டு தடை விதித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு சாப்பிடும்போது, படுக்கை அறையில் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உள்ளிட்ட  நேரங்களில் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம். இது தொடர் இணைய பயன்பாட்டுக்கு சற்று இடைவெளி கொடுக்கும்.

டைம் லிமிட் செட் பண்ணுங்க

பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பொதுபோக்கு, விளையாட்டு, ஷாப்பிங் என பலவற்றுக்கு பல வகையான செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த  நிலையில், நாள் முழுவதும் செயலிகளில் மூழ்கி கிடக்காமல் இருப்பதற்காக டைம் லிமிட் செட் செய்துக்கொள்ளலாம். இது செயலிகளை பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போதே நீங்கள் அன்றாட நேர பயன்பாட்டை மீறிவிட்டீர்கள் என்பதை உணர்த்தும்.

இதையும் படிங்க : இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

சில மணி நேரங்கள் இணையத்தை பயன்படுத்தாதீர்கள்

சில மணி நேரம் இணையத்தை பயன்படுத்தாமல் இருப்பது மூளைக்கு புத்துணர்ச்சியையும், வேலைகளை செய்து முடிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக சிலர் காலை எழுந்ததும் 2 முதல் 3 மணி நேரங்கள் வரை ஸ்மார்ட்போனக்ளை பயன்படுத்தமாட்டார்கள். காலையில் மூளையின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என்பதால் அந்த வேலையில் பயனுள்ள செயல்களை செய்வர். எனவே காலை அல்லது மாலை என உங்களுக்கு ஏதுவான நேரங்களில் இணையத்தை பயன்படுத்தாமல் இருங்கள்.

தேவையற்ற நோடிஃபிகேஷன்களை ஆஃப் செய்யுங்கள்

ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய அனைத்து செயலிகளிலும் நோடிஃபிகேஷன் (Notification) அனுப்பும் அமசம் உள்ளது. நோடிஃபிகேஷன் ஒருவரை அந்த செயலியை பயன்படுத்த தூண்டும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியமற்ற செயலிகளின் நோடிஃபிகேஷன்களை ஆஃப் செய்துவிடுங்கள்.

உறங்க செல்வதற்கு முன்னதாக இணையத்தை பயன்படுத்த வேண்டாம்

உறங்க செல்வதற்கு முன்னதாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது உறக்கத்தை பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே உறங்க செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரையாவது இணையதளம் மற்றுன் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பது சீரான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.