சஞ்சார் சாத்தி செயலிக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

Indian Government Withdraws Sanchar Saathi Mandatory Installation | இனி இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களில் அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான சஞ்சார் செயலி கட்டாயம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மத்திய அரசு அதனை வாபஸ் பெற்றுள்ளது.

சஞ்சார் சாத்தி செயலிக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Dec 2025 19:01 PM

 IST

புதுடெல்லி, டிசம்பர் 03 : இந்தியாவில் இனி அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற அரசின் சைபர் பாதுகாப்பு செயலி (Cyber Security App) கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு (Central Government) அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவு கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி முன்கூட்டியே கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் சஞ்சார் சாத்தி கட்டாயம் என கூறிய அரசு

இந்தியாவில் சைபர் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தான் அனைத்து பொதுமக்களும் சைபர் பாதுகாப்பு பெறும் வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்கூட்டிய்யே சஞ்சார் சாத்தி செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அப்டேட் வாயிலாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையும் படிங்க : டிஜிட்டல் கைது மோசடி.. ரூ.1.92 கோடி பணத்தை இழந்த 71 வயது முதியவர்!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உத்தரவை திரும்ப பெற்ற மத்திய அரசு

மத்திய அரசு ஸ்மார்ட்போன்களில் ப்ரீ இன்ஸ்டாலேஷன் (Pre Installation) மூலம் சஞ்சார் சாரதி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக இந்த செயலி மூல்ம மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கிடையே சஞ்சார் சாத்தி செயதியில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசு விளக்கமும் அளித்திருந்தது. ஆனாலும் எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. குறிப்பாக ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது.. அரசு போட்ட முக்கிய ரூல்ஸ்!

இவ்வாறு தொடர் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற்றுள்ளது.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!