அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போன்.. இவ்வளவு குறைந்த விலையிலா?

Realme 15x Launched in India | ரியல்மி நிறுவனம் தனது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி 15 எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போன்.. இவ்வளவு குறைந்த விலையிலா?

ரியல்மி 15 எக்ஸ்

Updated On: 

02 Oct 2025 13:33 PM

 IST

இந்தியர்கள் மத்தியில் ரியல்மி (Realme) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. காரணம், ரியல்மி நிறுவனம் மிக குறைந்த விலையில், சிறந்த அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி நிறுவனம் தற்போது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Realme 15 Series Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போன் (Realme 15x Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் தனது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 7,000 mAh பேட்டரி அம்சம் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இது உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ஆகிய ரேட்டிங்க்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த ஸ்மார்ட்போன் ML-STD-810H சான்றிதழையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : இனி Instagram, Facebook செயலிகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதுதான் நிலை.. மெட்டா திட்டவட்டம்!

ரியல்மி 15 எஸ்க் – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரியல்மி 15 எஜ்ஸ் ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனையும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.8 இன்ச் HD+LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இயர் பட்ஸ்களை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்!

விலை மற்றும் இதர அம்சங்கள்

ரியல்மி 15 எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப மாடலான 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், ரூ.15,999-க்கு இதனை வாங்கிக்கொள்ளலாம். இதற்கு அடுத்த மாடலான 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கடைசி வேரியண்டான 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு வங்கி சலுகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.