இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் தற்கொலை குறித்து தேடினால் பெற்றோருக்கு எச்சரிக்கை வரும்.. மெட்டா அறிமுகம் செய்யும் முக்கிய அம்சம்!
Parents Will Get Alert From Instagram | மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் சிறுவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மெட்டா நிறுவனம் அசத்தல் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

மாதிரி புகைப்படம்
உலக அளவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது. இது பொழுதுபோக்குக்கான சிறப்பான அம்சமாக உள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். என்னதான் இன்ஸ்டாகிராம் செயலி பொழுதுபோக்குக்கான சிறந்த அம்சமாக இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில், அதனை தடுக்கும் வகையில் மெட்டா முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
ஆபத்தான விஷயங்களை சர்ச் செய்தால் உடனே பெற்றோருக்கு தகவல்
பெரும்பாலான சிறுவர்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவர்களின் அறியாமை காரணமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதன் மூலம் பாலியல் தொல்லை உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள்ளும் அபாயகரமான முடிவையும் அவர்கள் எடுக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தான் மெட்டா ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, 18 வயதுக்குள்ள சிறுவர்கள் தற்கொலை அல்லது தங்களை தாங்களே வருத்திக்கொள்வது தொடர்பாக தேடினால் அது குறித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் சென்றுவிடும்.
இதையும் படிங்க : இந்த 4 விஷயங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தங்களது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பெற்றோர் பாதுகாப்பு அம்சத்தை வைத்திருக்கும் நபர்களுக்கு இத்தகைய எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என்று மெட்டா கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, தங்களை தாங்களே வருத்திக்கொள்வது மற்றும் தற்கொலை ஆகிய கண்டெண்டுகள் தொடர்பாக சில கடுமையான விதிமுறைகளை கொண்டுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது. மெட்டா அறிவித்துள்ள இந்த அம்சம் அடுத்த வாரம் முதல் முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அமலுக்கு வர உள்ளது.
சிறுவர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற தளமாக உள்ளதாக கூறி 2025, டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தொடர் கேள்விகள் எழுந்து வரும் நிலையில் மெட்டா இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.