ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.. முழு விவரம்!

Oppo Find X9 Series Smartphones Introduced | ஓப்போ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.. முழு விவரம்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் சீரீஸ் அறிமுகம்

Updated On: 

20 Nov 2025 22:02 PM

 IST

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் ஓப்போ (Oppo). ஓப்போ தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ்  ஸ்மார்ட்போன்களை (Oppo Find X 9 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 (Oppo Find X 9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ (Oppo Find X 9 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 மற்றும் எக்ஸ் 9 ப்ரோ – சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. அதாவது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் அம்சங்களை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் சிக்கல்.. வாட்ஸ்அப்பில் செய்யும் இந்த ஒரு மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்!

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ.74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேக் கொண்ட ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் ரூ.84,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,09,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சூம் செயலி பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை.. மத்திய அரசு முக்கிய தகவல்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ஸ்மார்ட்போன் டைட்டானியம் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சார்க்கோல் மற்றும் சில்க் வெள்ளை ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?