பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான நத்தின் போன் 3 ஏ லைட்.. முழு விவரம் இதோ!
Nothing Phone 3a Lite Smartphone Launched In India | நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை தொடந்து அதன் நத்தின் போன் 3 ஏ லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

நத்திங் போன் 3 ஏ லைட்
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள தான் நத்திங் (Nothing). இந்த நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நத்திங் 3 ஏ லைட் ஸ்மார்ட்போனை (Nothing 3a Lite Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெல்லிய தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங்க் 3ஏ லைட்
இந்த நத்தின் 3 ஏ லைட் ஸ்மார்ட்போன், நத்தின் 3 ஸ்மார்ட்போனை போலவே டிரான்ஸ்பேரண்ட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கம் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு உடனான கிளாசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய பிளாஸ்டிக் ஃபிரேமை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குரூப் மெம்பர் டேக்.. வாட்ஸ்அப் குரூப் சாட்டில் வரும் அட்டகாசமான அம்சம்!
டிஸ்பிளே அம்சம் எப்படி உள்ளது?
இந்த ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் 3000 நிட்ஸ் பிரைட்னஸ் வரை தாங்க கூடியது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் முதல் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை கொண்டுள்ளது.
நத்திங்க் 3ஏ – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
Nothing Phone 3a Lite launched in India 🇮🇳
📱6.77″ FHD+ 120Hz AMOLED display
💾MediaTek Dimensity 7300 Pro (4nm)
📸50MP (Main) + 8MP (UW) + 2MP (Macro) Rear Cameras
🤳16MP Front Camera
🔋5000mAh Battery
⚡33W Wired Charging
⚙️Android 15, Nothing OS 3.5Prices:
8GB + 128GB -… pic.twitter.com/z27L588cV5— TrakinTech (@TrakinTech) November 27, 2025
இந்த நத்திங் 3 ஏ லைட் ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.