இனி Instagram, Facebook செயலிகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதுதான் நிலை.. மெட்டா திட்டவட்டம்!

Meta's New Ad-Free Policy | மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை மெட்டா வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி Instagram, Facebook செயலிகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதுதான் நிலை.. மெட்டா திட்டவட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

27 Sep 2025 13:34 PM

 IST

பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மெட்டா (Meta) நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனர்கள் பணம் செலுத்துவது அல்லது விளம்பரங்களை பார்ப்பது என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று மெட்டா கூறியுள்ளது. அதாவது பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை கட்டணம் செலுத்தவில்லை என்றால் விளம்பரத்துடன் அந்த செயலிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட மெட்டா

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகளில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், அது பலருக்கும் மிகவும் பிடித்த செயலிகளாக உள்ளன. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனம் பயனிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, லண்டனில் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செயலிகளில் பணம் செலுத்துவது அல்லது விளம்பரங்களை பார்ப்பது என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : அமேசான் Vs பிளிப்கார்ட் சேல்.. ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

பணம் செலுத்துங்கள் அல்லது விளம்பரங்களை பாருங்கள்

இது குறித்து மெட்டா கூறியுள்ளதாவது, லண்டனில் வரும் வாரம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளம்பரங்களை பார்ப்பது அல்லது பணம் செலுத்துவது என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. வெப் செயலிகளுக்கு சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்றால் ரூ.345 செலுத்த வேண்டும் என்றும், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் இந்த செயலிகளை பயன்படுத்தும் நபர்கள் ரூ.472 செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் 19 மொழிகளில் மொழிப்பெயர்க்கலாம்.. வந்தாச்சு Instant Translation அம்சம்!

தகவல்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படாது

இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களுக்கு பணம் செலுத்தும்  நபர்களின் விவரங்கள் விளம்பரங்களுக்காக எடுத்துக்கொள்ளப்படாது என்று மெட்டா கூறியுள்ளது. மேலும், இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் அனைவருக்கு கட்டாயம் இல்லை என்று கூறியுள்ள மெட்டா விளம்பரங்களுடன் இந்த சமூல வளைதளங்களை பயன்படுத்த விரும்பும் நபர்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?