மேனுவல் ஏசியா? ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசியா? – காருக்கு எது சிறந்தது?

Manual vs Automatic AC : சமீப காலமாக கார்களில் மேனுவல் ஏசி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி என இரண்டு வகைகளில் ஏசிகள் கிடைக்கின்றன. இரண்டுக்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. இந்த கட்டுரையில் மேனுவல் ஏசிக்கும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசிக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

மேனுவல் ஏசியா? ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசியா? - காருக்கு எது சிறந்தது?

மாதிரி புகைப்படம்

Published: 

06 Jul 2025 17:29 PM

பொதுவாக கோடைக்காலங்களில், காரில் பயணிக்கும்போது காரில் ஏசி(AC) பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. பொதுவாக காரில் ஏசி பயன்படுத்தினால் மைலேஜ் (Mileage) பாதிக்கப்படும் என்ற பிரச்னை இருந்து வருகிறது. இதனை தவிர்க்க சில கார்களில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி (Automatic Climate Control AC) பொருத்தப்படுகிறது. இது கால நிலைக்கு ஏற்ப காரின் ஏசியை இயக்கும். ஆனால் சில கார்களில் மேனுவல் ஏசி இருக்கும். இது நமது தேவைக்கு ஏற்ப நிர்வகிக்க முடியும்.  ​​இந்த இரண்டு வகை ஏசிகளுக்கும் தனித்தனி நன்மைகள் இருந்து வருகின்றன. பல நேரங்களில் கார் வாங்குபவர்களிடையே இந்த  இரண்டு ஏசி வகைகளில் எது சிறந்தது, எது தங்கள் தேவைகளுக்கு சரியானது என்ற குழப்பம் நிலவுகிறது. இந்த கட்டுரையில் கார்களில் மேனுவல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஏசி ஆகிய இரண்டு ஏசி வகைகளில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

மேனுவல் ஏசி

மேனுவல் ஏசியில், கார் உள்ளே எவ்வளவு குளிர் வேண்டும், எவ்வளவு வேகத்தில் காற்று வீசவேண்டும், எந்த திசையில் காற்று வரவேண்டும் என்பதெல்லாம் நாமே கையால் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். இந்த வகை ஏசியில் மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் ஏசி இயங்கும்போது உள்ளே இருக்கும் சூடான காற்றை குளிர்விக்கும்.

நன்மைகள்

இதில் உள்ள நன்மைகள் என்னவென்றால் இவ்வகை ஏசி உள்ள கார்களின் விலை குறைவானவை. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதனை பராமரிப்பதும் எளிதானது.

பிரச்னைகள்

குறிப்பாக மாறிவரும் வானிலையின் போது வெப்பநிலை மற்றும் ஃபேனின் வேகத்தை நீங்கள் அடிக்கடி சரிசெய்ய வேண்டும்.  அடிக்கடி ஏசியின் செயல்பாட்டை மாற்றுவது ஓட்டுநருக்கு கவனத்தை சிதறடிப்பதாக அமையக் கூடும்.  இதனால் விபத்து போன்ற அபாயங்களும் நேரலாம்.

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி என்பது கார் கேபினில் உள்ள வெப்பநிலையை தானாகவே கட்டுப்படுத்தும் ஒரு ஸ்மார்ட் ஏசி அமைப்பாகும். இதில், வெப்பநிலையை புரிந்துகொண்டு, ஏசியின் அளவைப் பராமரிக்க சென்சார்கள் செயல்படுகின்றன. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாடுகளை மீண்டும் மீண்டும் மாற்ற வேண்டியதில்லை.

நன்மைகள்

இந்த அமைப்பு காருக்குள் இருக்கும் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் பராமரிக்கிறது. ஓட்டுநர் மீண்டும் மீண்டும் ஏசியின் அளவை மாற்ற வேண்டியதில்லை, இதனால் அவர் சாலையில் கவனம் செலுத்த முடியும். இதனால் ஒவ்வொரு பயணியும் தங்கள் வசதிக்கேற்ப வெப்பநிலையை அமைக்க முடியும்.

பிரச்னைகள்

இந்த அம்சம் பொதுவாக நடுத்தர மற்றும் அதிக விலை உள்ள கார்களில் வருகிறது. அதில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் மற்றும் மின்னணு பொருட்களில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பழுதுபார்க்கும் செலவு அதிகமாக இருக்கலாம்.

எந்த வகை ஏசி உங்களுக்கு சரியானது?

இப்போது இந்த இரண்டு விருப்பங்களில் எது உங்களுக்கு சிறந்தது என்ற கேள்வி எழுவது இயல்பு. இது முற்றிலும் உங்கள் தேவைகள், ஓட்டுநரின் விருப்பம் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்தது. குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புவோருக்கு மேனுவல் ஏசி சிறந்தது. அடிக்கடி பயணிப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு அட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி சிறந்தது.