தடையில்லாம ஐபிஎல் பார்க்கணுமா? ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோவின் ரூ.149 பிளான்
குறைந்த செலவில் அதிக டேட்டா மற்றும் ஸ்டிரீமிங் வசதிகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.149 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் ஐபிஎல் ரசிகர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

மாதிரி புகைப்படம்
ஐபிஎல் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் போராடி வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை தடையில்லாமல் பார்க்க இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ முக்கிய பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த பிளானில் ஹாட்ஸ்டாரையும் 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஐபிஎல் போட்டிகளைக் கூட தவறவிடாமல் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாகும்.
ரூ.149 கிரிக்கெட் டேட்டா பிளான்
குறைந்த செலவில் அதிக டேட்டா மற்றும் ஸ்டிரீமிங் வசதிகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.149 ரீசார்ஜ் பிளான் என்பது ஒரு டேட்டா ஆட் ஆன் திட்டமாகும். அதாவது நீங்கள் ஏற்கனவே வேறு பிளான் பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக இந்த பிளானை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனே ஒரு டேட்டா பிளானை ரீசார்ஜ் செய்திருக்கும் பயனர்கள், ஐபிஎல் போட்டிகளை முழுமையாக பார்க்கும் அளவுக்கு டேட்டா போதாது என கருதினால் இந்த பிளானை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த திட்டத்தில் மொத்தம் 30 நாட்களுக்கான 10 அதிவேக டேட்டா வழங்கப்படும். அதனுடன் 90 நாட்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும். இந்த 10 ஜிபி டேட்டாவை தினசரி வரம்பு என்ற எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தேவையான பொழுது முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபிஎல் ரசிகர்களுக்கு இது சிறந்த தேர்வு
இந்த பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட் ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்க முடியும். மேலும் ஜியோ ஹாட் ஸ்டாரில் உள்ள திரைப்படங்கள், வெப் சீரிஸ், சின்னத்திரை தொடர்கள் போன்றவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் இலவசமாக கண்டுகளிக்க முடியும்.
ஆனால் இந்த திட்டம் முழுக்க முழுக்க டேட்டா மட்டும் எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டத்தில் வாய்ஸ் கால் சேவை, எஸ்எம்எஸ் போன்ற சேவைகள் கிடைக்காது. எனவே ஏற்கனவே வேறு ஜியோ திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். கூடுதலாக இந்த திட்டத்தில் இணையலாம்.
மேலும் 10ஜிபி டேட்டா போதாது என நினைக்கும் பயனர்களுக்காக ரூ.195 பிளானையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 30 நாட்களுக்கு 15ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்திலும் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கும்.