முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றலாமா?.. ரயில்வே விதிகள் கூறுவது என்ன?

Change Name of the Passenger in Train Ticket | இந்தியாவை பொருத்தவரை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றம் செய்யலாமா என்பது குறித்து பார்க்கலாம்.

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றலாமா?.. ரயில்வே விதிகள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Sep 2025 22:37 PM

 IST

இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. காரணம், ரயில்களில் குறைந்த செலவில் மிக நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்பதால் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில், முன்கூட்டிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை முன்கூட்டியே ரயில் டிக்கெட் முனப்திவு செய்து, பிறகு பயணம் செய்ய முடியாமல் போனால் சிக்கலாகிவிடும். இத்தகைய சூழலில் ரயிலில் டிக்கெட்டுகளில் பயணியின் பெயரை மாற்றம் செய்ய முடியுமா, அதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என பலருக்கும் குழப்பம் இருக்கும். இந்த நிலையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றம் செய்ய முடியுமா, அது குறித்து ரயில்வே துறை விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றம் செய்யலாமா?

ரயிலில் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாவது டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய சூழலில் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை ரத்து செய்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இந்த சூழலில் ரயில் டிக்கெட் பயனற்றதாக மாறிவிடும். இந்த நிலையில் தான், இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதற்கு சில காரணிகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவற்றை நீங்கள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் உங்களால் ரயில் டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்ய முடியும்.

இதையும் படிங்க : ஜெமினி இணைப்பு முதல் ஸ்மார்ட் தேடல் வரை… கூகுள் குரோமில் 10 புதிய ஏஐ வசதிகள்

ரயில் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்ற விதிகள் என்ன என்ன?

  • பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரயில் டிக்கெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • ஒரு டிக்கெட்டுக்கு ஒருமுறை மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும்.
  • ஒருவரால் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் செய்ய முடியவில்லை என்றால் அவரது குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே அந்த டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்து பயணம் செய்ய முடியும்.

இதையும் படிங்க : பெண்கள் மீண்டும் பணியில் சேர இன்ஃபோசிஸ் புதிய திட்டம் – காரணம் என்ன?

மேற்குறிப்பிட்ட இந்த அம்சங்களுக்குள் அடங்கும் நபர்கள் தங்களது ரயில் டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்துக்கொள்ளலாம். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு இந்த அம்சம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.