Blend போலவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான Friends அம்சம்.. அட இது சூப்பரா இருக்கே!

Instagram's New Friends Feature | இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு பலனளிக்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ப்ரண்ட் என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Blend போலவே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான Friends அம்சம்.. அட இது சூப்பரா இருக்கே!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Aug 2025 14:35 PM

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் புகழ்பெற்ற சமூக ஊடக செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி. இந்த செயலியில் பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில், இதற்கு பயனர்கள் அதிகம். ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்கும் வகையிலும், புதிய பயனர்களை ஈர்க்கும் வகையிலும் மெட்டா, இன்ஸ்டாகிராமில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரண்ட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் – சிறப்பு அம்சங்கள் என்ன?

இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சம் தான் ரீல்ஸ். இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்காகவே ஏராளமான பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயனர்களுக்கு மிகவும் பிடித்தமாக உள்ள அம்சத்தை மேலும் எளிதானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்ற அந்த நிறுவனம் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நண்பர்கள் உடன் இணைந்து ரீல்ஸ்களை பார்க்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிளண்ட் (Blend) அம்சத்தை ஒத்ததாக உள்ளது.

இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

நண்பர்கள் விரும்பிய ரீல்ஸ்களை பார்க்க உதவும் அம்சம்

அதாவது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் பக்கத்தில் மேலே வலது பக்கத்தில் பிரண்ட்ஸ் (Friends) என்ற அம்சம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது நண்பர்கள் விரும்பிய வீடியோக்களை பார்ப்பதற்காக இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த பிரண்ட்ஸ் அம்சத்தை கிளிக் செய்யும் பட்சத்தில் அதில் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு நண்பர்களாக உள்ளவர்கள் லைக் செய்த வீடியோக்கள் வரும். சில நண்பர்களுக்கு ஒரே விதமான சிந்தனைகள், பிடித்த விஷயங்கள் இருக்கும். எனவே அவர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிங்க : மெட்டா ஏஐ டிரான்ஸ்லேஷன் வசதி – இனி ஒரே வீடியோவை அனைத்து மொழிகளிலும் பகிரலாம்!

பிரண்ட்ஸ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு ரீல்ஸ் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  3. ரீல்ஸ் வரும் அதே பக்கத்தில் மேலே வலது பக்கத்தில் பிரண்ட்ஸ் என்ற அம்சம் இருக்கும்.
  4. அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களது நண்பர்கள் லைக் செய்த வீடியோக்கள் வரிசையாக வரும்.

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி இன்ஸ்டாகிராமின் பிரண்ட்ஸ் அம்சத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.