Instagram : இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டியதில்லை.. இன்ஸ்டாகிராமில் வந்த அசத்தல் அம்சம்!

Instagram Introduced New 3:4 Aspect Ratio | இன்ஸ்டாகிராமில் பயனர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில், புதிய அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

Instagram : இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டியதில்லை.. இன்ஸ்டாகிராமில் வந்த அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 Jun 2025 18:17 PM

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பல்வேறு செயலிகள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப செயலிகள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், பொழுதுபோக்கு (Entertainment) மற்றும் தகவல் தொலைத்தொடர்புக்காக (Communication) அறிமுகம் செய்யப்பட்ட செயலி தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிக்கு ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்கள் இருப்பினும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் இன்ஸ்டாகிராமில், மெட்டா பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்கான புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலியில் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராமை வெறும் பொழுபோக்கிறாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்கள் கிடைப்பதால் பலருக்கும் அது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. இது தவிர, இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளவர்கள் அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர அனுமதி வழங்கப்படுகிறது. அதன் மூலம் பலரும் தங்களது புகைப்படங்கள், குடும்ப உறுப்பினர்கள் உடன் எடுக்கும் புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த புகைப்படங்களை பகிரும் அம்சத்தில் தான் இன்ஸ்டாகிராம் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் வந்த புதிய அம்சம்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை 3:4 அளவிலும் பதிவிடும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 1:1, 4:5 மற்றும் 16:9 ஆகிய அளவுகளில் மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பயனர்கள் புகைப்படங்களை வேறு செயலிகளை பயன்படுத்தி இந்த அளவுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது அதற்கெல்லாம் அவசியல் இல்லை. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சம் மூலம் விருப்பமான அளவுகளில் வைத்து புகைப்படங்களை பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.