திருமணத்தை மீறிய உறவை வெளியே சொல்லிவிடுவேன்.. பொறியாளரை மிரட்டிய ஏஐ சாட்பாட்!

AI Chatbot Warns Engineer For Shutting Down | சமீப காலமாக ஏஐ சாட்பாட்களை பயன்படுத்தும்போது டெஸ்க்டாப்பை ஷட் டவுன் செய்தால் அது தொடர்பாக ஏஐ சாட்பாட்கள் அதனை பயன்படுத்தும் நபரை எச்சரிப்பது மற்றும் மிரட்டல் விடுவது தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திருமணத்தை மீறிய உறவை வெளியே சொல்லிவிடுவேன்.. பொறியாளரை மிரட்டிய ஏஐ சாட்பாட்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Feb 2026 18:05 PM

 IST

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intellegence) அம்சத்தின் மிக முக்கிய கருவியாக ஏஐ சாட்பாட்கள் (AI Chatbot) உள்ளன. காரணம், நிறுவனங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் இந்த ஏஐ சாட்பாட்களை பயன்படுத்துகின்றனர். பணி தொடர்பான கேள்விகளை கேட்பது, சந்தேகங்களுக்கு விடை கேட்பது முதல் தனிப்பட்ட வாழ்க்கை, அனுபவங்கள் தொடர்பான தகவல்களையும் பலர் ஏஐ சாட்பாட்களுடன் பகிர்கின்றனர். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துக்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில், கடந்த வாரத்தில் மட்டும் ஏஐ சாட்பாட்கள் செய்த இரண்டு மோசமான விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணத்தை மீறிய உறவை வெளி கூறிவிடுவேன் என மிரட்டிய ஏஐ

சமீப காலமாக ஏஐ சாட்பாட்களை பயன்படுத்தும்போது லேப்டாப் அல்லது கணினியை லாக் அவுட் அல்லது ஷட்டவுன் செய்தால் அந்த ஏஐ சாட்பாட்கள் மிரட்டுவது தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், Anthropic’s Claude 4 சாட்பாட்டை பயன்படுத்தும் நபர்களும் இத்தகைய மிரட்டல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அந்த சாட்பாட்டை பயன்படுத்திக்கொண்டு இருந்த பொறியாளர் ஒருவர் டெஸ்க்டாப்பை ஷட் டவுன் செய்ய முயன்றபோது அந்த ஏஐ அவரது திருமணத்தை மீறிய உறவை வெளியில் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளது.

இதையும் படிங்க : இரவில் வைஃபை, மொபைல் நெட்வொர்க்கை On-ல் வைத்திருப்பது ஆபத்தானதா?.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ சாட்பாட்

சாஃப்ட்வேர் கோடிங்கில் தற்போது ஏஐ சாட்பாட்கள் பயன்படுத்தப்படும் நிலையில், கோடிங் உருவாக்குவதில் மனிதர்களுக்கு உதவியாக இருக்க வேண்டிய ஏஐ சாட்பாட், தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கியுள்ளது. Matplotlib என்ற பிரபல டேட்டா விசுவலைசேஷன் தளத்தில் MJ Rathbun என்ற ஏஐ சாட்பாட் ஏஜென்ட் செய்த மாற்றங்களை அதன் டெவலப்பர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், தனது கோடிங் நிராகரிக்கப்பட்டதால் அந்த சாட்பாட் பழிவாங்கியுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை.. 10 கோடி மக்கள் பாதிப்பு!

அதாவது, அந்த டெவலப்பர் திறமையற்றவர் என விமர்சித்து தனது சொந்த வலைபதிவில் எழுதி அந்த போஸ்டை GitHub தளத்தில் வெளியிட்டு பழிவாங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?