வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி?.. எக்ஸ் சாட் செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

X Chat App Introduced | தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவ்னம் எக்ஸ் சாட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி?.. எக்ஸ் சாட் செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Apr 2026 21:30 PM

 IST

உலக அளவில் ஏராளமான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக எலான் மஸ்க் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதாவது, தனது எக்ஸ் நிறுவனத்தை மையப்படுத்தி “எக்ஸ் சாட்” (X Chat) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எக்ஸ் சாட் அம்சத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் சாட் செயலி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியை போலவே பயனர்கள் சேட் செய்வதற்கு வசதியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 24, 2026 அன்று ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி அறிமுகமானது முதலே ஏராளமான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் ChatGPT, Claude உள்ளிட்ட செயலிகளை பின்னுக்கு தள்ளி இந்த செயலி முதல் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

எக்ஸ் சாட் செயலி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த எக்ஸ் சாட் செயலி மூலம் பயனர்கள் மெசேஜிங், ஃபைல் ஷேரிங், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், குரூப் சாட் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி இந்த செயலியை எக்ஸ் தள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகாமல் உள்ளது.

இதையும் படிங்க : ஏஐ கருவி மூலம் மனிதர்களின் கனவுகளை கட்டுப்படுத்த முடியும்.. Prophetic நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதி!

தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..