அமேசானில் வந்தது Add to Delivery.. இனி ஆர்டர் செய்த பிறகும் கூட பொருட்களை ஆட் செய்துக்கொள்ளலாம்!
Amazon New Feature for Better Purchase | அமேசான் செயலியை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் கூட பொருட்களை ஆர்டர் செய்துக்கொள்ளும் வகையில் Add to Delivery என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பொதுமக்கள் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அமேசான் செயலியை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக பொருட்களை வாங்கும் நிலையில், பயனர்களுக்கு அட்டகாசமான ஒரு அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய அம்சத்தை அறிமுகம் செய்த அமேசான்
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமாக உள்ளதுதான் அமேசான். இந்த நிறுவத்தின் சேவை உலகம் முழுவதும் உள்ள நிலையில், மில்லியன் கணக்கான பொதுமக்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் “Add to Delivery” என்ற அம்சத்தை அமேசான் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் கடைசி நேரத்தில் கூட பொருட்களை கார்டில் ஆட் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இனி விமானத்தில் பயணம் செய்யும்போது பவர் பேங்க் பயன்படுத்தக்கூடாது.. எமிரேட்ஸ் அதிரடி உத்தரவு!
அமேசானின் “Add to Delivery” அம்சத்தின் சிறப்புகள் என்ன?
அமேசான் செயலியை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்துக்கொள்கின்றனர். சிலர் பொருட்களை ஆர்டர் செய்த பிறகு வேறு ஒரு பொருளையும் ஆட் செய்ய வேண்டும் என நினைப்பர். ஆனால், ஆவ்வாறு செய்வதன் மூலம் தனித்தனி ஆடர்களாக தான் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதில் தான் அமேசான் நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய அரட்டை.. App Store-ல் முதல் இடம் பிடித்து சாதனை!
ஆர்டர் செய்த பிறகும் பொருட்களை ஆட் செய்யலாம்
அதாவது Add to Delivery என்ற அம்சத்தை அமேசான் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி கடைசி நேரத்தில் பொருட்களை ஆர்டர் செய்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே கார்ட்டில் சேகரித்து ஆர்டர் செய்த பொருட்களுடன் வேறு ஏதேனும் பொருள் தேவைப்பட்டால் அதனையும் இணைத்து ஆர்டர் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த முறையை பயன்படுத்தி ஆர்டர் செய்வதற்கு ஏற்கனவே ஆர்டர் செய்த பொருட்கள் டிஸ்பேட்ச் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.