Amazon Prime Day Sale : அமேசான் பிரைம் டே சேல்.. என்ன என்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?
Amazon Prime Day 2025 Sale | அமேசான் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தனது பிரைம் டே சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் லேப்டாப், டேப்லெட், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமான அமேசான் (Amazon) தனது பிரைம் டே சேலை (Prime Day Sale) அறிவித்துள்ளது. ஜூலை 12, 2025 முதல் ஜூலை 14, 2025 வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை என அனைத்திற்கும் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் அல்லது மின்சாத பொருட்களை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்தி, மிக குறைந்த விலையில் சிறப்பு சலுகைகளுடன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில், அமேசான் பிரைம் டே சேலில் என்ன என்ன பொருட்கள் எவ்வளவு தள்ளுடியுடன் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் பிரைம் டே சேல் – அசத்தல் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் பொருட்கள்
அமேசான் பிரைம் டே சேலில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப் உள்ளிட்டவற்றுக்கு அசத்தல் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட் டிவிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி
அமேசான் பிரைம் டே சேலில் ஸ்மார்ட் டிவிகளுக்கு 50 சதவீதம் வரை அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 4K Ultra HD முதல் QLED மற்றும் OLED ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்திற்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல முன்னணி பிராண்டுகளான சோனி, எல்ஜி, சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர இந்த டிவிகளை வாங்கும்போது No Cost EMI, Streaming Subscription உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க : ஜூலை 12-14 வரை நடைபெற உள்ள Amazon Prime Day Sale.. கொட்டி கிடக்கும் சலுகைகள்.. லிஸ்ட் இதோ!
டேப்லெட்களுக்கு 60 சதவீதம் தள்ளுபடி
ஸ்மார்ட் டிவிகளை போலவே டேப்லெட்களுக்கும் அமேசான் அதிரடி சலுகைகளை வழங்குகிறது. இந்த 2025 அமேசான் பிரைம் டே சேலில் டேப்லெட்களுக்கு அமேசான் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. முன்னணி பிராண்டுகளான சாம்சங், லெனோவா மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வாஷிங் மெஷின்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடி
அமேசானின் தள்ளுபடி பட்டியலில் அடுத்ததாக இடம் பிடித்துள்ளது வாஷிங் மெஷின் தான். இந்த 2025 அமேசான் பிரைம் டே சேலில் வாஷிங் மெஷின்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. டாப் லோடு, ஃப்ரண்ட் லோடு, செமி ஆட்டோமெடிக் ஆகிய அம்சங்களை கொண்ட வாஷிங் மெஷின்கள் இதில் அடங்கும். முன்னணி பிராண்டுகளான எல்ஜி, சாம்சங், ஐஎஃப்பி உள்ளிட்ட நிறுவனங்களின் வாஷிங் மெஷின்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும்.