Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

AI Backdrops on Instagram Stories | இன்ஸ்டாகிராமில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. உரையாடல், ஸ்டோரி உள்ளிட்டவற்றை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஏஐ பேக்டிராப்.

Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

18 May 2025 20:20 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக செயலிகளின் (Apps) வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்னதான் புதிய புதிய செயலிகள் அறிமுகமானாலும் பெரும்பாலான மக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமில் பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் என அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதால் பலரும் தங்களது பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் அந்த ஒரே செயலியை தேர்வு செய்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மெட்டா நிறுவனம் பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்ட ஏஐ பேக்டிராப்ஸ்

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது தான் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பேக்டிராப்ஸ் (Backdrops). இந்த புதிய அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி பேக்டிராப்ஸ் செட் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்ரோரிக்கும் ஏஐ பேக்டிராப்ஸ் செட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏஐ பேக்டிராப் செட் செவது எப்படி?

  1. முதலில் ஸ்டோரி போடுவதற்கான புகைப்படத்தை உங்கள் ஸ்மார்ட்போனின் கேலரியில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  2. பிறகு அங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் தோன்றும் ஆப்ஷன்களில் “Backdrop” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. இந்த அம்சம் மூலம் நீங்கள் ஸ்டோரி போடுவதற்காக தேர்வு செய்த புகைப்படம் நன்கு ஆராயப்படும்.
  5. அதில் என்ன என்ன விஷயங்கள் உள்ளது, மனிதர்கள் உள்ளனரா என்பதை செயற்கை நுண்ணறிவு உண்ணிப்பாக கவனிக்கும்.
  6. அதில் உங்களுக்கு தேவையானவற்றை மற்றும் தேர்வு செய்துக்கொள்ளலாம்.
  7. நீங்கள் புகைப்படத்தில் தேவையானவற்றை தேர்வு செய்த பிறகு “Next” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  8. அதில் உங்களுக்கு எந்த மாதிரியான பேக்டிராப் வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் பதிவிட வேண்டும்.
  9. இதற்கு பிறகு உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்து ஸ்டோரி பேக்டிராப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக எளிதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பேக்டிராப் சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.