2026-ல் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகளின் விலை உயரப்போகிறது?.. பகீர் தகவல்!

Smartphones, Laptops and Tablets Price Hike | 2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களின் விலை உயர உள்ளதாக அறிக்கைகள் மூலம் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வடுகின்றன. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026-ல் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகளின் விலை உயரப்போகிறது?.. பகீர் தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Jan 2026 23:44 PM

 IST

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. பேருந்து பயணம் முதல் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வரை என அனைத்திற்கும் டிஜிட்டல் அம்சம் தான் அடிப்படையாக உள்ளன. இவ்வாறு அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவைகள் உள்ள நிலையில், அவற்றை பயன்படுத்த ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop) மற்றும் டேப்லெட்டுகள் (Tablet) ஆகியவை கட்டாயமாக உள்ளன. இவை மனிதர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத மற்றும் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்த நிலையில், 2026-ல் மனிதர்களின் பிரதான தேவைகளாக உள்ள ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதங்களின் விலை உயரப்போகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

2026-ல் அதிரடியாக விலை உயரப்போகும் டிஜிட்டல் சாதனங்கள்

2025, டிசம்பர் மாத இறுதியில் ஐடிசி தனது கணிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் 2026 ஆம் ஆண்டில் பிசி துறை முழுவதும் குறிப்பிடத்தக்க விலை உயர்வை காணக்கூடும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகளின் விலையில் தற்போது உள்ளதை போலவே நீடிக்காது என்றும், விரைவில் அவை விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வாய்ஸ் ஓவர் வைஃபை வசதியை அறிமுகம் செய்த BSNL.. இனி தடையற்ற இணைய சேவையை பெறலாம்!

திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கூறு செலவுகள் (Component Costs) அதிகரித்து வருவதன் காரணமாக சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளின் விலைகளை உயர்த்த திட்டமிட்டு வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) துறை அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ரேம் விலை கடும் அழுத்தத்தில் உள்ளது. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ-ன் (Generative AI) விரைவான விரிவாக்கம் ஆனது தரவு மையங்கள் (Data Centers) மற்றும் ஏஐ ஆக்ஸலரேட்டர்களில் (AI Accelerators) பயன்படுத்தப்படும் உயர் அலைவரிசை நினைவகத்திற்கான பெரும் தேவையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ரயில் ஒன் செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட் புக் செய்தால் 3% தள்ளுபடி.. இந்திய ரயில்வே அசத்தல் அறிவிப்பு

குங்குமம் இல்லாததால் தடைபட்ட திருமனம்... - சில நிமிடங்களில் டெலிவரி செய்த பிளிங்கிட் டெலிவரி உழியர்
அமேசான் காடுகளில் இருக்கும் கொட்டாத தேனீக்கள்.. ஏன் இது முக்கியத்துவம் வாய்த்ததாக உள்ளது?
போர்ச்சுகலில் ஹனிமூன் கொண்டாடும் சமந்தா – ராஜ் நிதிமோறு..
வ்ருஷபா படத்தின் 7 நாள் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?