சென்னையில் மொட்டை மாடியில் செல்போன் பேசிய இளைஞர் – இடி தாக்கி பலி – என்ன நடந்தது?
Youth Dies After Lightning Strike :சென்னை அருகே மொட்டை மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 20. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
மழை காலங்களில் பொதுவாக இடி மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிப்பாக கேரளாவில் இடி மின்னலால் அதிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இடி மின்னல் தருணங்களில் வீடுகளில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக செல்போன் பேசுவதையும் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இடி மின்னலின்போது செல்போன் இயங்கினால் அதில் நேரடியாக மின்னல் தாக்கக் கூடும். சென்னையில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டிருக்கும்போது மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.
மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சென்னையில் முகப்பேர் அருகே பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் முகந்தன். இவர் அக்டோபர் 6, 2025 அன்று தனது வீட்டு மொட்டை மாடியில் வைத்து செல்போன் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென இடி தாக்கியதில் செல்போன் வெடித்து அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகுந்தனுக்கு வயது 20. செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்பினால்…. மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வீட்டுக்கு அருகே உள்ள தோப்பில் வேப்பமுத்துக்களை சேகரித்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் இடியும் மின்னலுமாக காணப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த நேரம் பார்த்து வேப்பமரத்தில் இடி தாக்கியுள்ளது. இந்த நிலையில் வேப்பமரத்துக்கு அடியில் இருந்த சகோதரிகள் இருவர் மீதும் இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : மாரத்தான் ஓடும்போதே பிரிந்த உயிர்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. சென்னையில் ஷாக்
இடி, மின்னலின்போது செய்யக் கூடாதவை
- இடி பெரும்பாலும் உயரமான இடங்களைத் தாக்கும். அதனால் மரங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றின் அருகில் நிற்காதீர்கள்
- மேகம் சூழ்ந்து காணப்பட்டால் திறந்த வெளிப்பகுதிகளில் நிற்காதீர்கள். திறந்த வெளிகளில் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
- கையில் உலோகப் பொருட்கள் குறிப்பாக குடை, சாவி போன்றவற்றை வைத்திருக்காதீர்கள்
- மழைக்காலங்களில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
- செல்போன் பேசுவதை தவிர்க்கவும். முடிந்தவரை அதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
- வீடுகளில் டிவி, ஃபிரிட்ஜ், போன்ற பொருட்கள் மின்னல் தாக்கி சேதமடையலாம். எனவே அதனை அணைத்து, பிளக்கை நீக்கவும்.
- செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்க்கவும், மொபைல் போனில் பிளைட் மோடில் வைக்கவும்.
- ஜன்னல் கதவு அருகே நிற்காதீர்கள். மின்னல் அவற்றின் வழியாக உங்களைத் தாக்கலாம்.
- பாதுகாப்பான இடத்தில் குறிப்பாக சிமெண்ட் கட்டிடத்தின் கீழ் நிற்பது நல்லது.