Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொல்லை கொடுத்த கொழுந்தன்.. திட்டமிட்டு தீர்த்துகட்டிய அண்ணி.. பகீர் சம்பவம்!

Woman Killed Her Husband's Brother | பெண் ஒருவர் தனது கணவன் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த தனக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனை பெற்றோரின் உதவியுடன் கொலை செய்து கை மற்றும் கால்களை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொல்லை கொடுத்த கொழுந்தன்.. திட்டமிட்டு தீர்த்துகட்டிய அண்ணி.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2025 08:20 AM

திண்டுக்கல், ஜூன் 19 : திண்டுக்கல்லில் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கணவனின் தம்பியை பெண் ஒருவர் தனது தாய், தந்தையுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திடுக்கிடும் சம்பவம் வெளியே வந்துள்ளது. இந்த நிலையில், தனக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கொழுந்தனை அவரது அண்ணி திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கொழுந்தன்

திண்டுக்கல் மாவட்டம் பாறையூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஜூன் 15, 2025 அன்று கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் கிணற்றில் சடலமாக கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது ஜோதிமணி வசித்த அதே ஊரான பூத்தாம்பட்டியை சேர்ந்த கோமதி, அவரது தந்தை நடராஜன், தாய் நிலா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜோதிமணி கொலை குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது கொலை செய்யப்பட்ட ஜோதிமாதியின் அண்ணன் முருகன் (48) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கோமதி தனது மூன்று குழந்தைகளுடன் பூதாம்பட்டியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனியாக வசித்து வந்த கோமதிக்கு ஜோதிமணி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோமதி தனது பெற்றோருடன் இணைந்து ஜோதிமணிக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரது கை மற்றும் கால்களை கட்டி சென்று கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜோதிமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், கோபதி, அவரது பெற்றோர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.