பழச்சாறு என நினைத்து ஆசிட் குடித்த பெண் பரிதாப பலி.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
Woman Drinks Acid Mistaking It Of Juice | சேலத்தை சேர்ந்த திவ்யபாரதி என்ற பெண், வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிடை பழச்சாறு என நினைத்து குடித்த நிலையில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகியுள்ளார்.

மாதிரி புகைப்படம்
சேலம், மார்ச் 20 : சேலம் (Salem) மாவட்டம், அஸ்தம்பட்டி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு திருமணமாகி 31 வயதில் திவ்யபாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். செந்தில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், திவ்யபாரதி தனது பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திவ்யபாரதியின் அறியாமை காரணமாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் தனது அறியாமை காரணமாக உயிரை விட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாழச்சாறு என நினைத்து ஆசிடை குடித்த பெண்
திவ்யபாரதியின் பெற்றோர் வீட்டி, வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் இருந்துள்ளது. இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் இருந்த திவ்யபாரதி சமையல் அறையில் பாட்டிலில் இருந்த அந்த வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிடை பழச்சாறு என நினைத்து குடித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு மிக கடுமையான வயிற்று எரிச்சல் ஏற்பட்ட நிலையில், திவ்யபாரதி வலியால் துடித்துள்ளார். இதனால், அச்சமடைந்த அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல்: அத்தியாவசிய பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு அனுமதி
சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக பலியான பெண்
திவ்யபாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து மருத்துவ மனைக்கு வந்த போலீசார், திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு – கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு – யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?
பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
இதன் பிறகு திவ்யபாரதியின் கணவர் செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழச்சாறு என நினைத்து ஆசிட் குடித்ததால் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திவ்யபாரதியின் குடும்பத்திற்கு அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.