தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் 5 டிகிரி வரை உயரும்.. வானிலை நிலவரம்..

Weather Forecast: தொடர்ந்து, மார்ச் 9-ம் தேதி (நாளை) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 10-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலையும் 5 டிகிரி வரை உயரும்.. வானிலை நிலவரம்..

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

08 Mar 2026 06:29 AM

 IST

சென்னை, மார்ச் 08: தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட ஒரு சில இடங்களில் இன்று 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சற்று நிம்மதியைத் தந்துள்ளது. தொடர்ந்து, வரும் நாட்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

இன்று லேசான மழைக்கு வாய்ப்பு:

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 8) நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் வானிலை நிலவரம்:

தொடர்ந்து, மார்ச் 9-ம் தேதி (நாளை) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

10-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 12, 13 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

வெப்பநிலை 5 டிகிரி உயர்வு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட ஒரு சில இடங்களில் இன்று 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Follow Us
Related Stories
“இன்னும் 2 வாரத்தில் ஊழலில் சிக்கிய அமைச்சர் சிறைக்கு செல்வார்”.. பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!
“சனிப்பெயர்ச்சியை போல திமுகவும் பெயர்ச்சி அடைய வேண்டும்”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!
இப்போதான் பஞ்சாயத்து முடிஞ்சுது.. அதுக்குள்ளேயா.. திமுக-காங்கிரஸ் இடையே வெடித்தது மோதல்… கட்சியினர் அதிர்ச்சி!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்… சீமான் அறிவிப்பு!
K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய முகம் கே.ஏ.செங்கோட்டையன்…!
அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் மாற்றம்… பாஜகவின் ரகசிய திட்டம்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வீசிய அரசியல் வெடிகுண்டு!
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு
வாட்ஸ்அப் உரையாடல்கள் மட்டுமே விவாகரத்து வழங்க போதுமானது அல்ல - மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி