தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இழந்த செல்வாக்கை பெறலாம்… காங்கிரஸிற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ்
SAC Suggests Alliance to Congress: காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெற தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அது காங்கிரஸிற்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்றும் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை, ஜனவரி 28 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசியல் வருகை, வாக்குச் சதவீதங்களில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு முக்கிய கூட்டணிகள் ஏற்கனவே தங்களின் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், தவெக சார்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தெரிவித்த நிலையில், விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய விஜய், தனித்து போட்டி என்று பேசியது பபப்பை ஏற்படுத்தியது. அதிமுகவடன் கூட்டணி அமைப்பார் என்ற பேசப்பட்ட நிலையில் அதிமுகவை விஜய் மறைமுகமாக ஊழல் கட்சி என்று பேசியிருந்தார். இதனால் அதிமுக அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதையும் படிக்க : திமுக – காங்கிரஸ் இடையே வெடித்த நேரடி மோதல்.. கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தடை!!
ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கனிமொழி
மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் பின்னணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானாலும், அவை எந்த முடிவுகளும் எட்டப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான், பிரபல இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், அளித்துள்ள ஒரு பேட்டி, தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர், சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் முன்வர வேண்டும் என்றும், இது காங்கிரசுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்? இது தான் உண்மையான காரணம் – மனம் திறந்த டிடிவி தினகரன்..
மேலும் பேசிய அவர், விஜய் ஆட்சியில் பங்கு என்பது குறித்து பேசுகிறார். அந்த அணுகுமுறையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது மற்றொரு கட்சியை சார்ந்தே அரசியலில் செயல்படுவதால், காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து வருகிறது. தவெக போன்ற புதிய அரசியல் சக்தியுடன் இணைந்தால், காங்கிரஸ் மீண்டும் தனது பழைய அரசியல் செல்வாக்கை பெற முடியும். கடந்த 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, தேசிய கட்சிகளுக்கு மாநில அரசியலில் இடம் குறைந்துவிட்டது என்றார்.