19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?

TVK Leader Vijay At Panaiyur: ஜாமீன் பெற்ற மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கரூரில் இருந்து அக்டோபர் 16, 2025 அன்று (நேற்று) சென்னை வந்தனர். இருவருமே தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசினர்.

19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

17 Oct 2025 06:15 AM

 IST

சென்னை, அக்டோபர் 17, 2025: கரூர் துயரச் சம்பவம் நடந்தது முடிந்து 19 நாட்களுக்கு பின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கரூர் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க: கடலூரில் இடி தாக்கி 4 பெண்கள் பலி… விவசாய நிலத்தில் வேலை பார்த்தபோது நேர்ந்த சோகம்

கரூர் துயர சம்பவம் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்:

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதேபோல் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவும் கலைக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப்பொது செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இதில் மதியழகன் மட்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் கரூர் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் பவுன்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் படிக்க: நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… தொடர்ந்து 3 நாட்கள் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரி்ககை

கட்சி தலைவர் நிர்வாகிகள் விஜயுடன் சந்திப்பு:

நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்படாமல் அவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமீன் பெற்ற இருவரும் கரூரில் இருந்து அக்டோபர் 16, 2025 அன்று (நேற்று) சென்னை வந்தனர். இருவருமே தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்களிடம் நேரில் வந்து பார்க்க முடியவில்லை என தலைவர் விஜய் வருத்தம் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் சிறையில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள், எப்படி இருந்தார்கள், என்ன நடந்தது என்ற அனைத்து விவரங்களையும் கேட்டறிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் அசம்பாவிதத்திற்கு பின்னர் 19 நாட்கள் கழித்து விஜய் தனது கட்சியாளர் உலகமான பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
தெருவில் விடப்பட்ட பிறந்த குழந்தை.... இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
மூளை கீழே விழும் விநோத நோய் - 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்
சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..