மு.க.ஸ்டாலின் அங்கிள்… பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா?… – முதல்வர் மீது விஜய் கடும் விமர்சனம்

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21, 2025 அன்று நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் அங்கிள்...  பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா?... - முதல்வர் மீது விஜய் கடும் விமர்சனம்

தவெக தலைவர் விஜய்

Updated On: 

21 Aug 2025 18:03 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தவெக கொள்கை தலைவர்களின் படங்களுடன், அண்ணா மற்றும் எம்ஜிஆரின் படங்களும் இடம் பெற்றிருந்தது ஹைலைட்டாக அமைந்தது. விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 35 நிமிடங்கள் பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகள் குறித்து கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை அங்கிள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தவெக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது, ”ஒருமுறை சிங்கம் கர்ஜித்தது என்றால், அந்த சத்தத்துக்கு 8 கி.மீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கிற மிருகங்களைத் தான் வேட்டையாடும். தன்னை விட அளவில் பெரிய மிருகங்களைத் தாக்கி வெல்லும். அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு எளிதில் யாரையும் தொடாது. தொட்டால் விடாது. என்றார்.

இதையும் படிக்க : மகளிர் ஊக்கத்தொகை முதல் தூய்மை பணியாளர்கள் வரை.. தமிழக அமைச்சர்களை சாடிய நிர்மல் குமார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விஜய் பேசியதாவது,

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விஜய் பேசியதாவது, எம்ஜிஆர் போல குணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எவர் என்னுடைய அண்ணன் என்றார். மேலும், ஸ்டாலின் அங்கிள் what uncle it’s very Wrong uncle என்றார். மேலும் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அது மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விட மாட்டோம். நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கிறதா, ஊழல் இல்லாமல் இருக்கிறதா சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதா, பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறதா டாஸ்மாக்கில் மட்டுமே இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் என சொல்கிறார்கள். பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : மதுரை தவெக மாநாட்டில் நடிகர் அஜித்தின் கட் அவுட்- வைரலாகும் போட்டோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விஜய் பேசிய வீடியோ

மேலும் பேசிய அவர் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள் என்று பேசினார். மேலும் நமது கொள்கை எதிரி பாஜக தான். அதே நேரத்தில் நமது ஒரே எதிரி திமுக தான் என்றார்.