முன்ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆனந்த், நிர்மல் குமார்!
TVK Rally Stampede : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் - நிர்மல் குமார்
சென்னை, அக்டோபர் 05 : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் நடந்தது. இந்த பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜோதி ராமன் மற்றும் தண்பாணி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஆனந்த் மற்றும் நிர்மல்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தனர்.
Also Read : அது உண்மையில்ல…. வதந்தி – விஜய் குறித்து வெளியான தகவல் – உள்துறை அமைச்சகம் விளக்கம்
உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆனந்த், நிர்மல் குமார்
இதனை அடுத்து, ஆனந்த், நிர்மல் குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனை அடுத்து, போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த முன்ஜாமீன் மனு 2025 அக்டோபர் 6ஆம் தேதியான (நாளை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமா அல்லது ரத்து செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read : விஜய்க்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு? களமிறங்கும் கமாண்டோக்கள்… சிஆர்பிஎப் பரிந்துரை!
இதற்கிடையில், கரூர் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதி மக்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.