தவெக போராட்டம்.. போலீஸ் போட்ட 16 நிபந்தனைகள்.. நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
TVK Protest Over Custodial Death : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. லாக் ஆப் மரணத்தை கண்டித்து காலை 10 மணிளவில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

தவெக தலைவர் விஜய்
சென்னை, ஜூலை 12 : லாக் அப் மரணங்களை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் (Tamilaga Vettri Kazhagam) 2025 ஜூலை 13ஆம் தேதியான நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் (Custodial Death) உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி தமிழக வெற்றிக் கழக போராட்டத்தை நடத்த உள்ளது. மேலும், லாக் அப் மரணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட கோரியும் போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்த்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்க உள்ளனர். சென்னை சிவானந்தா சாலையில் 2025 ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் விஜயும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக போராட்டம்
இந்த போராடத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு 16 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். அதன்படி, பட்டாசு வெடிக்க கூடாது என்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்லக் கூடாது என்றும் விஜய் போராட்ட களத்திற்கு வரும்போதும், வீட்டிற்கு திரும்பும்போது எந்த ஒரு விரும்பத்தகாத செயலிலும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Also Read : லாக் அப் மரணங்கள்.. பனையூருக்கு வந்த 21 குடும்பத்தினர்.. விஜய் சந்திப்பு!
இந்த நிலையில், போராட்டம் குறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆர்ப்பாட்டத்தை கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தவும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்கள் கொண்டு வர வேண்டாம், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதி, மதம், இனம் மற்று தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் இருக்கக் கூடாது, ஆர்ப்பாட்டத்தின்போது உருவ பொம்மைகளை எரிக்கக் கூடாது, மக்களுக்கு இடையூறு உண்டாக்கும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்க கூடாது, ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியா கலைந்து செல்ல வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
Also Read : சிவகங்கை அஜித் குமார் மரணம்.. விசாரணையை துவங்கிய சிபிஐ.. அடுத்து என்ன?
நேரில் சந்தித்த விஜய்
கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் 21 பேரின் குடும்பத்தினரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25,000 வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, அவர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், “உங்களுக்கு நியாயமும், தீர்ப்பும் வாங்கிக தர வேண்டியது இந்த விஜயின் கடமை. வழக்குக்கான செலவை தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும். ஒவ்வொரு வழக்கிற்கும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மூன்று வழக்கறிஞர்கள் வரை இந்த வழக்கை எடுத்து நடத்துவார்கள்” என தெரிவித்திருந்தார்.