ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு.. நிரந்தர ரயிலாக மாறிய திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ்

Trichy–Tambaram Express Train: திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் 18 பெட்டிகள் மற்றும் முன்பதிவு வசதி உள்ளது. டெல்டா மாவட்ட பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதாக கருதப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு உற்சாக அறிவிப்பு.. நிரந்தர ரயிலாக மாறிய திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ்

திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ்

Updated On: 

03 Mar 2026 10:00 AM

 IST

திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் பல முக்கிய டெல்டா மாவட்ட நிலையங்கள் வழியாக தாம்பரத்தை அடைகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 16807 மாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது. வாரத்தில் வியாழன் முதல் திங்கள் வரை 5 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சேவை இல்லை. 18 பெட்டிகளுடன் முன்பதிவு வசதி கொண்ட இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நிரந்தர சேவையாக மாற்றப்பட்ட ரெயில்

திருச்சி–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் என்பது திருச்சி (திருச்சிராப்பள்ளி) மற்றும் சென்னை தாம்பரம் இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும் முக்கிய பயணிகள் ரயில் சேவையாகும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தை இணைக்கும் இந்த சேவை, வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் வணிகத் தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

திருச்சி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது நிரந்தர சேவையாக மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த ரயில், திருச்சியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய முக்கிய நிலையங்கள் வழியாகச் சென்று பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது.

இதன் மூலம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு விரைவாகவும் வசதியாகவும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read: விழுப்புரம் முதல் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயில் அறிவிப்பு..

மறுமார்க்க சேவை மற்றும் ரயில் இயக்கும் நாட்கள்

மறுமார்க்கத்தில், தாம்பரம்–திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16807) மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. இந்த சேவை வாரத்தில் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 5 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் ரயில் சேவை கிடையாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கு அதிக வசதி

மொத்தம் 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தினசரி பயணிகள் மற்றும் தொழில் தொடர்பான பயணிகளுக்கு இது பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இந்த பகல் நேர ரெயில் சேவையை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் இந்த ரயில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதாக கருதப்படுகிறது.

Follow Us
Related Stories
வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!
Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..
Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..
விஜய் கெட்டப்பில் வந்து வாக்கு செலுத்திய வாக்காளர்கள்… திருச்சி கிழக்கு தொகுதியில் சுவாரஸ்யம்!
Tamil Nadu Polling: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. ஒரு மணி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு?
“ஆரம்பத்தில் பயம்.. அப்புறம் உற்சாகம்!” – முதல்முறை வாக்காளர்களின் நெகிழ்ச்சியான தேர்தல் அனுபவங்கள்!
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..