வைகுண்ட ஏகாதசி…. திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்

Srirangam Vaikunta Ekadasi: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு டிசம்பர் 30, 2025 அன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி.... திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - வெளியான தகவல்

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Updated On: 

23 Dec 2025 20:28 PM

 IST

திருச்சி, டிசம்பர் 23: திருச்சி (Trichy) மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இங்கு வைகுண்ட ஏகாதேசி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்த கோவில், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.  பரமபத வாசல் திறப்பு விழா என அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் சிறப்பு திருவிழாவாகும். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ப்டடுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலிம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30, 2025 அன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படவிருக்கிறது. இதனையடுத்து திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு டிசம்பர் 24, 2025 முதல் ஜனவரி 5, 2025 வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 27 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும்.. உதகையில் உறைபனி தொடரும் – வானிலை எப்படி இருக்கும்?

வைகுண்ட ஏகாதசியின் முதல் நாளான திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, பகல் பத்து எனப்படும் பத்து நாள் பகல் திருவிழாவும், அதன் பின்னர் இரா பத்து எனப்படும் பத்து நாள் இரவு திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 19, 2025 அன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 20, 2025 முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

வைகுண்ட ஏகாதசியின் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  இந்த அலங்காரத்தைக் காணும் பக்தர்கள், மிகுந்த பக்தியுடன் சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.  குறிப்பாக முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு அன்று திறக்கப்படும். அன்றைய தினம் அதிகாலையே பக்தர்கள் வருகை தருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

இதையும் படிக்க : அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் பகல் பத்து, இரா பத்து மற்றும் பரமபத வாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், மேலும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்… – ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவ வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்
அரையாண்டு விடுமுறை….. பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை – விவரம் இதோ
தவெக அலுவலகம் முன்பு அஜிதா உண்ணாவிரதம் – பின் வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த் – பரபரப்பு சம்பவம்
விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்
விஜய் கார் மறிப்பு… தனக்கு பதவி வழங்கவில்லை என ஆர்ப்பாட்டம் – பரபரப்பான பனையூர்
கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..