TNPSC Group 4: குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Hall Ticket 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஜூலை 12 அன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. 3,935 காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி?

Tamil Nadu Public Service Commissio

Published: 

06 Jul 2025 09:40 AM

தமிழ்நாடு ஜூலை 06: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகும். மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கட்டாய தமிழ், பொது அறிவு மற்றும் திறனறி பகுதிகளாக இரண்டாக நடைபெறும். www.tnpsc.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் (Hall ticket download) செய்யலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) தெரிவித்துள்ளது.

ஜூலை 12ஆம் தேதி நடக்கும் குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப்பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்பும் நோக்கில், மொத்தமாக 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது. முதலில் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவுப் பகுதி (75 கேள்விகள்) மற்றும் திறனறி பகுதி (25 கேள்விகள்) இடம்பெறும்.

டவுன்லோட் செய்வது எப்படி?

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது TNPSC இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை எளிதாக பதிவிறக்கம் செய்ய, கீழ்காணும் படிகளை பின்பற்றலாம்:

முதலில் TNPSC இணையதளமான www.tnpsc.gov.in-க்கு செல்ல வேண்டும். அங்குள்ள “ஏற்கனவே பதிவு செய்தோர்” எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். உள்நுழைந்தவுடன் உங்கள் சுயவிவர பக்கத்தில் “ஹால் டிக்கெட்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து “TNPSC CCSE-IV 2025” தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன்லோட் இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். இதையடுத்து உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். தேர்விற்கு செல்லும் போது இந்த ஹால் டிக்கெட் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது, தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம், அரசுத்துறை மற்றும் அதன் இணைப்புப் பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு போட்டித் தேர்வுகள் நடத்துவது. 1929ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது ஆண்டுதோறும் Group 1, Group 2, Group 2A, Group 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்கும் இது, நியாயமான மற்றும் திறமையான பணியாளர்களை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.