டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – எப்படி டவுன்லோடு செய்வது?
TNPSC Hall Ticket : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையம் காலியாக உள்ள 645 பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 28, 2025 அன்று இந்த தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNSPSC) நடத்த உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் செப்டம்பர் 18, 2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வு செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த கட்டுரையில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் ஹால்டிக்கெட்டை எப்படி டவுன்லோடு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேர்வு நடைபெறும் பணியிடங்கள்
இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 645 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில்,
-
உதவி ஆய்வாளர்
-
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
-
நன்னடத்தை அலுவலர்
-
சார் பதிவாளர்
-
வணிக வரித்துறை உதவியாளர்
போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2 பிரிவில் தேர்வுகள் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிக்க : தெற்கு ரயில்வேயில் 3538 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – எப்படி விண்ணப்பிப்பது ?
ஹால் டிக்கெட் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Link:https://t.co/sNu36rCcQf pic.twitter.com/IxVJM3LBQF
— TNPSC (@TNPSC_Office) September 18, 2025
அதேபோல,
-
கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர்
-
இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர்
-
உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
-
அரசு அலுவலக உதவியாளர்கள்
-
இளநிலை கணக்காளர்
போன்ற பல்வேறு பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் நிரப்பப்படுகின்றன. குரூப் 2, 2ஏ முதற்கட்டத் தேர்வுகள் வரும் செப்டம்பர் 28 2025 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம்
தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpscexams.in மூலம் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து, தேர்வுநாளில் தேர்வுக்கூடத்துக்கு கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 3வது முறையாக ஸ்விகி கட்டணம் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்கள்
-
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வுக்கூடம், நேரம் ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும்.
-
புகைப்பட அடையாள அட்டையுடன் ஹால் டிக்கெட்டை கொண்டு வருவது அவசியம்.
-
தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படாத பொருட்களான மொபைல், ஸ்மார்ட் வாட்ச், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வேலை என்பது பலரது நீண்ட நாள் கனவு. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த தேர்வுகளுக்காக மக்கள் கடுமையாக தயாராகி வந்தனர்.