தமிழ்நாடு போராடுமா? யாருடன் போராடும்? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

R.N.Ravi : வள்ளலாரின் 202வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் உள்ள வள்ளலார் சிலைக்கு ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் 50 சதவீத உயர்கல்வி விகிதம் கொண்ட தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு போராடுமா? யாருடன் போராடும்? - ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

ஆளுநர் ஆர்.என்.ரவி

Published: 

05 Oct 2025 16:49 PM

 IST

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் (R.N.Ravi) இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.  இந்த நிலையில் வள்ளலாரின் 202வது பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 5, 2025 அன்று ஆளுநர் மாளிகையில் உள்ள வள்ளலார் பூங்காவில் வள்ளலார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமான வள்ளலார் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அவர், நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும்போது தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என எழுதியுள்ளார்கள். யாருடன் போராடும். தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. கண்டிப்பாக நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.  அவர் பேசியது தொடர்பாக இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

யாருடன் போராடும்?

ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 5, 2025 அன்று நடைபெற்ற வள்ளலாரின் 202வது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், நான் தமிழ்நாட்டில் பயணக்கும்போது தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற போஸ்டரை பார்த்தேன். தமிழ்நாடு யாருடன் போராடும். நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத் தாழ்வு இருந்தாலும் அதிகம் படித்தவர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

50 சதவீத உயர்கல்வி விகிதம் கொண்ட தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றன என்று பேசினார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 2, 2025 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழகத்தில் சாதிய ரீதியான பிரச்னைகள் அதிகரித்திருப்பதாகவும், தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை – காரணம் இதுவா?

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

கும்பகோணத்தில் பல்கலைக்கழகத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சதீமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.