TN 10, 11th Supplementary Exam: துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
TN HSE+1 Supplementary Dates: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2025-ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 மே 19 முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம். 2025 ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும்.

துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மே 16: தமிழ்நாடு (Tamilnadu) பள்ளிக்கல்வித்துறை (School Education Department) 2025 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள், சான்றிதழ், விடைத்தாள் நகல் மற்றும் துணைத்தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மே 19 முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகலுக்கு 2025 மே 20–24 வரை பள்ளி மூலமாக விண்ணப்பிக்கலாம். தோல்வியடைந்தோர் மற்றும் தேர்வுக்கு வராதோர் ஜூலை 4 முதல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு 2025 மே 22–ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்ததாகவும் அமைச்சர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(எஸ்.எஸ்.எல்.சி), (பிளஸ் 1) பொதுத் தேர்வு முடிவுகள்
பள்ளிக்கல்வித்துறை 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் கோருதல், துணைத்தேர்வு மற்றும் விண்ணப்ப நேரங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக சான்றிதழை எப்போது பெறலாம்?
மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக சான்றிதழ்களை மே 19, 2025 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 10 மணி முதல் தங்களின் மதிப்பெண்களை பார்க்கலாம்; அதேபோல பிளஸ் 1 மாணவர்கள் மதியம் 2 மணி முதல் மதிப்பெண்கள் பெற முடியும்.
தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் நகலை பெற விரும்பும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், மே 20 முதல் மே 24, 2025 வரை தாங்கள் பயின்ற பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது?
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும், தேர்வில் பங்கேற்காதவர்களும், ஜூலை 4, 2025 முதல் நடைபெற உள்ள துணைத்தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான கால அட்டவணை மே 16, 2025 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் 2025 மே 22 முதல் ஜூன் 6, 2025 வரை தங்கள் பள்ளி மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி விகிதம் குறித்து பெருமிதம் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறித்து பெருமிதம் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் முயற்சி இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது” எனக் கூறினார். “முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், தமிழ்நாடு கல்வி தரத்தில் முன்னணியில் உள்ள மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும்” என அவர் வாழ்த்து தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்கள் – 4,36,120 பேர், மாணவியர்கள் – 4,35,119 பேர் எனப் பதிவாகி உள்ளது. இதில் 8,17,261 பேர் (93.80%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வில் பங்கேற்று இந்த கல்வியாண்டிலேயே தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு 2025 ஜூலை 4ஆம் தேதி தொடங்கும்
இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புத் துணைத்தேர்வு 2025 ஜூலை 4ஆம் தேதி தொடங்கும் என்றும், விண்ணப்பங்கள் 2025 மே 22 முதல் ஜூன் 6 வரை பெறப்படும் என்றும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதற்கான நேரிடையான தேர்வுக்கால அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.