கனமழை எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
Heavy Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 2 : இலங்கை (Sri Lanka) அருகே வங்கக் கடலில் உருவான தித்வா (Ditwah) புயல், டிசம்பர் 2, 2025 அன்று சென்னைக்கு அருகே 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த நிலையில் மையம் கொண்டிருப்பதாகவும், அது 8 கி.மீ வேகத்தில் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 3, 2025 அன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூரில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அது கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை திருவள்ளூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மழையைப் பொறுத்து விடுமுறை விடுவதை அம்மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க : சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..
விடுமுறை குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு
Due to continous rains , only SCHOOLS will remain closed tomorrow (03/12/25) in Tiruvallur District ..
Eat , Study , Sleep and Repeat 🔁
Best wishes
M Prathap
District Collector— Collector Tiruvallur (@TiruvallurCollr) December 2, 2025
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் நிலையில், 20 மாவட்டங்களில் டிசம்பர் 2, 2025 செவ்வாய் கிழமை இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..
அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் டிசம்பர் 3, 2025 செவ்வாய் கிழமை இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.