Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..

Chennai Rains: சென்னையில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த 18 மணி நேரம் வரை நீடிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Dec 2025 12:30 PM IST

சென்னை, டிசம்பர் 2, 2025: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் 1, 2025 தேதியான நேற்று அதிகாலை முதல் விடிய விடிய இடைவிடாத மழை பதிவானது. மிதமான மழை என்றாலும், அவ்வப்போது கன மழையும், சில நேரங்களில் மிக கன மழையும் பதிவானது. வங்கக் கடலில் உருவான ‘டிக்குவா’ புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வட திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தற்போது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர், புதுச்சேரியிலிருந்து 120 கிலோமீட்டர், கடலூரிலிருந்து 140 கிலோமீட்டர், நெல்லூரிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் வட தமிழக–புதுச்சேரி கடற்கரைக்கும் இடையேயான தூரம் 25 கிலோமீட்டர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பாதி வழியில் நின்ற மெட்ரோ ரயில்.. 500 மீட்டர் வரை ரயில் பாதையில் நடந்து சென்ற பயணிகள்..

சென்னையில் மழை தொடரும்:

சென்னையில் இடைவிடாத மழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த 18 மணி நேரம் வரை நீடிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கன மழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி மழை மேகங்கள் உருவாகி வருவதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தற்போது 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவில் மேலும் நெருங்கி வரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: குடையுடன் போங்க மக்களே..! சென்னை திருவள்ளூரில் கனமழை தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்..

எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை:

சென்னையில் இதன் காரணமாக 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக:

  • எண்ணூர் 26 சென்டிமீட்டர்
  • பாரிமுனை 25 செண்டிமீட்டர்
  • ஐஸ் ஹவுஸில் 22 சென்டிமீட்டர்
  • மணலி, பொன்னேரி பகுதிகளில் 21 சென்டிமீட்டர்
  • பேசின் பிரிட்ஜ், பெரம்பூர் பகுதிகளில் 20 சென்டிமீட்டர்
  • செங்குன்றத்தில் 19 சென்டிமீட்டர்
  • விம்கோ நகர், வடபழனி, டிஜிபி அலுவலகம், மேடவாக்கம் — 18 சென்டிமீட்டர்
  • தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் — 17 சென்டிமீட்டர்
  • புழல், சாணி கிராமம், சைதாப்பேட்டை, துரைப்பாக்கம் — 16 சென்டிமீட்டர்
  • பெரம்பூர், அமைச்சகரை — 15 சென்டிமீட்டர்
  • எம்.ஜி.ஆர். நகர், நாராயணபுரம் ஏரி, அடையாறு — 14 சென்டிமீட்டர்
  • காசிமேடு, வேளச்சேரி, அண்ணா பல்கலைக்கழகம் — 13 சென்டிமீட்டர்
  • நந்தனம், வளசரவாக்கம், வில்லிவாக்கம், நெற்குன்றம், ராஜா அண்ணாமலைபுரம், கொரட்டூர் — 12 சென்டிமீட்டர்
  • சோழிங்கநல்லூர், அண்ணா பல்கலைக்கழகம், மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை — 11 சென்டிமீட்டர்